Close
செப்டம்பர் 19, 2024 11:11 மணி

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல்

புதுக்கோட்டை

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ஊரக மற்றும் நகர்புறப்பகுதிகளில் 2022-23 ஆம் ஆண்டிற்கு மாநில அளவிலான மணிமேகலை விருதிற்கான சுயஉதவிக்குழு, கிராம வறுமை ஒழிப்புச்சங்கம், ஊராட்சி மற்றும் வட்டார அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு ஆகிய சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

2022-23 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருது பெறுவதற்கு மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவைகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே மேற்காணும் விருதிற்கு தகுதியான சமுதாய மக்கள் அமைப்பகளிடமிருந்து வட்டார இயக்க மேலாண்மை அலகில் 25.06.2023 தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று பரிசீலித்து அதனை 6 காரணிகளின் அடிப்படையில் தரமதிப்பீடு செய்து தகுதியான சமுதாய அமைப்புகளின் கருத்துருக்களை உரிய ஆவணங்களை ஆய்வு செய்து ஒவ்வொரு சமுதாய அமைப்பிற்கும் முதல் மதிப்பெண் வாங்கிய சமுதாய அமைப்புகளை மாவட்ட அளவில் திட்ட இயக்குநர் மற்றும் உதவித்திட்ட அலுவலர்கள் விண்ணப்பித்த சமுதாய அமைப்புகளின் கருத்துருக்களை நேரில் ஆய்வு செய்து மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு 08.05.2023 -ஆம் தேதிக்குள் அனுப்பிட வேண்டும். மேலும் 2022-23 ஆண்டிற்கு மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்களை சமர்பிப்பது உள்ளிட்ட கால அட்டவணை கீழ்கண்ட விவரப்படி தெரிவிக்கப்படுகிறது.

26.05.2023 முதல் 25.06.2023 வரை வட்டார அளவில் விண்ணப்பங்களை பெறுதல் (30 நாட்கள்). 26.06.2023 முதல் 08.07.2023 வரை வட்டார அளவில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாவட்ட அலுவலகத்திற்கு பரிந்துரை செய்தல் (12 நாட்கள்). 09.07.2023 முதல் 20.07.2023 வரை மாவட்ட அளவில் கருத்துருக்கள் ஆய்வு செய்தல், மாவட்ட குழுவிற்கு பரிந்துரைத்தல் (11 நாட்கள்). 21.07.2023 முதல் 31.07.2023 வரை மாவட்ட அளவிலான தேர்வுக்குழு கூட்டம் நடத்துதல் மாநில விருதுக்கு பரிந்துரைத்தல் (10 நாட்கள்). 20.08.2023 அன்று மாநில அலுவலகத்திற்கு கருத்துருக்கள் அனுப்பிட இறுதி நாள் ஆகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top