Close
செப்டம்பர் 20, 2024 1:23 காலை

ஈரோட்டில் “பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

ஈரோடு

உலக சுற்றச்சூழல் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் வென்ரறு பரிசு பெறும் மாணவர்கள்

உலக சுற்றச்சூழல் தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் பெருந்துறை சிப்காட் ஜவுளி உற்பத்தி தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் “பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு” மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இஆப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாக முகப்பு பகுதியில் இன்று (05.06.2023) உலக சுற்றச்சூழல் தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் பெருந்துறை சிப்காட் ஜவுளி உற்பத்தி தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் “பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு” மினி மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ராஜ கோபால் சுன்கரா   கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5- ஆம் நாள் உலக சுற்றுச் சூழல் தினம் உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐக்கிய நாடுகள் அவை, தற்போதைய 2023-ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தினத்திற்க்காக ”பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்லுங்கள்” (Beat Plastic Pollution) என்ற கருப்பொருளை அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களினால் பல்வேறு பயன்பாடுகள் இருப்பினும், ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள்தான் இன்று சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.

ஒரு பிளாஸ்டிக் பை மக்களால் சராசரியாக பயன்படுத்தப் படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே, ஆனால், அவை மட்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் பல நூறு ஆண்டுகள் ஆகும். அதிகப்படியான இந்த பிளாஸ்டிக் மாசுபாட்டினால் நமது பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது. மேலும், கடல்வாழ் உயிரினங்கள் உள்பட நமது சுற்றுச்சூழல் அமைப்பில் பேரழிவையும் மற்றும் நமது குழந்தைகளின் ஆரோக்கியத் தில் பாதகமான விளைவுகளையும் இந்த பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக, ஏற்கெனவே,  தமிழ்நாடு முதலமைச்சரால் 23.12.2021 அன்று ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழிக்கும் விதமாக துணிப் பைகளை பயன்படுத்தவேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது.

மேலும் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் கீழ்கண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்துள்ளது. உணவுப் பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மக்கோல் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்),பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்கள், பிளாஸ்டிக்காலான உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் கொடிகள் ஆகியவை தொடர்பாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் (05.06.2023) உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் பெருந்துறை சிப்காட் ஜவுளி உற்பத்தி தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் “பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு விழிப்புணர்வு” தொடர்பான மினி மாரத்தான் போட்டி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு பசுமை முதன்மையாளர் விருதினை ஒளிரும் ஈரோடு அமைப்பு, இலஞ்சி சமூகநல இயக்கம் – ஈரோடு, பண்ணாரியம்மன் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் ஆகியோருக்கு விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் தலா ரூ.1,00,000/- த்திற்கான காசோலையினையும் வழங்கினார்.

மேலும், மினி மாராத்தான் போட்டியானது பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாக முகப்பு பகுதியில் தொடங்கி பெருந்துறை முக்கிய சாலைகளின் வழியாக பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  நிறைவடைந்தது.

இதில், பெருந்துறை சிப்காட் பகுதியை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் 850 – மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் முதல் இடத்தினை .பட்டேல் (தேவி டிரேடர்ஸ்), இரண்டாம் இடத்தினை திருமலைசாமி (டெய்ல்ரஸ் கிரியே ஷன்), மூன்றாம் இடத்தினை செல்வம் (தாய் இண்டர் நேஷனல்) ஆகியோருக்கும்  கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, முதல்வர் (பெருந்துறை, ஈரோடு அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை) மரு.வள்ளி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் .உதயக்குமார் (பெருந்துறை), .மோகன் (ஈரோடு), உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் செல்வகணபதி,  ராஜ்குமார்,  முத்துராஜ்.

பேரூராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன் (பெருந்துறை), ஜி.கே.செல்வம் (கருமாண்டிசெல்லிபாளையம்), பெருந்துறை வட்டாட்சியர் பூபதி, ஒளிரும் ஈரோடு அமைப்பு சின்னசாமி, தன்னார்வலர் கள், சிப்காட் தொழில் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top