Close
செப்டம்பர் 20, 2024 1:22 காலை

புத்தகம் அறிவோம்… நிகழ்வுகள், பிறழ்வுகள்…

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

“நிகழ்வுகள், பிறழ்வுகள், “ஆரம்பப் பள்ளி ஆசிரியர் மு. ஜோசப் பன்னீர்செல்வம் அவர்களின் சிந்தனையைத் தூண்டும் நூல். இந்த நூலில் 148 நிகழ்வுகளை அது காலவெள்ளத்தில் நிகழ்த்திய மாற்றங்களை சுவையாக பதிவு செய்திருக்கிறார்.

முதல் நிகழ்ச்சியாக, பள்ளிக்கூடம் வராத ஒரு மாணவன் பின்னர், காலவெள்ளத்தில் வார்டு உறுப்பினராகி, ஆசிரியர் பணியாற்றும் பள்ளிக்கே கல்விக்குழு தலைவராக வந்ததை சொல்லி “பாழா ஆளா” என்று கேட்டு முடித்திருப்பார்.

இது போல பல சம்பங்களை வரலாற்று நிகழ்வுகளை, அரசியல் , அறிவியல் செய்திகளை சுவையாகச் சொல்லியிருக்கிறார் ஜோசப். எந்த ஒரு நிகழ்வையும் மற்றவர்கள் சாதாரணமாக கடந்து போவதுபோல் கடந்து போகாமல் அவற்றை உற்று நோக்கி, வரலாற்றுப் பார்வையில் அறிவியல் நோக்கில் பதிவு செய்துள்ளார். அவர் எழுத்து சுவையான வாசிப்பு அனுபவத்தை தருகிறது.

இதற்கு அணிந்துரை தந்துள்ள பால புரஷ்கார் விருது பெற்ற , இந்து தமிழ்திசை முதுநிலை உதவி ஆசிரியர் மு. முருகேஷ் சொல்கிறார்.. இந்தப் பதிவுகளில் வரலாறு இருக்கிறது; அரசியல் இருக்கிறது; பல வெற்றியாளர்களின் கதைகள் இருக்கின்றன; உலக நாடுகள் பற்றிய சுவையான செய்திகள் இருக்கின்றன; இந்நூலில் இல்லாதது எதுவுமேயில்லை என்று சொல்லத்தக்க வகையில் எல்லாமிருப்பதே இதன் சிறப்பு என்று.

இந்நூலை “தேடல்களின் திரட்டு, தெவிட்டாத தேன் லட்டு” என்று குறிப்பிடுகிறார் புதுகை யின் புகழ்பெற்ற எழுத்தாளர் சோலச்சி.
தென்கச்சி சுவாமிநாதன் 5 நிமிட “இன்று ஒரு தகவலில் “ஒரு தகவலை அருமையாக, சுவையாக சொல்வதுபோல ஜோசப் பன்னீர் செல்வம்’ நிகழ்வுகள் பிறழ்வுகளில்’ ஒரு பக்கத்தில் அதேபோன்று சொல்லியிருப்பது இந்நூலின் சிறப்பு.
வெளியீடு:இனிய நந்தவனம் பதிப்பகம். 9443284823.

…பேராசிரியர் விஸ்வநாதன், வாசகர் பேரவை…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top