Close
நவம்பர் 21, 2024 11:59 மணி

புதுகை வெங்கடேஸ்வரா பள்ளியில் பசுமை வகுப்பறை திறப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பசுமை வகுப்பறையை முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையில் பள்ளியின் மேலாண்மை இயக்குனர் நிவேதிதாமூர்த்தி திறந்து வைத்தார்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் முற்றிலும் புதிய முயற்சியாக பசுமை வகுப்பறை திறக்கப்பட்டது.

நிகழ்வுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். ”மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம்” எனும் எண்ணத்தை குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் விதைக்கும் வகையில் புதிய முயற்சியாக பசுமை வகுப்பறையை பள்ளியின் மேலாண்மை இயக்குனர் நிவேதிதாமூர்த்தி திறந்து வைத்தார்.

பசுமை வகுப்பறையைச் சுற்றிலும் மரக்கன்றுகள், பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. வகுப்பறைக்கு வரும் மாணவர்கள் கண்ணைக்கவரும் வகையில் அமைந்த பச்சை வண்ணங்களைக் கண்டுவியந்து மகிழ்வார்கள்.

மாணவர்களின் எதிர்காலம் பசுமையாய் அமைவதோடு மரம்வளர்த்து மண்வளம் காக்கவேண்டும் என்ற எண்ணம் பசுமையாய் அவர்களுக்குள் பதியவேண்டும் என்ற வகையில் இந்த பசுமை வகுப்பறைகள் திறக்கப்பட்டுள்ளதாக பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தெரிவித்தார்.

புதுக்கோட்டை
புதிதாக திறக்கப்பட்ட பசுமை வகுப்பறை

இதன் தொடர்நிகழ்வாக எல்லா வகுப்பறைகளையும் பசுமை வகுப்பறைகளாக மாற்றும் திட்டமும் செயல்படுத்தப்பட இருக்கி்றது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கடைசி வேலை நாளில் விதைக்கலாம் அமைப்போடு இணைந்து மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் பள்ளியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மரக்கன்று களை முறையாகப் பராமரிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

இதில் பள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி, மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் கணியன் செல்வராஜ், உதயகுமார் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டர்.

உலகம் வெப்பமயமாதலைத் தவிர்க்கும் பசுமைப்புரட்சியை பள்ளியிலிருந்தே தொடங்கும் விதமாக இந்த பசுமை வகுப்பறை திறப்புவிழா பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top