Close
நவம்பர் 25, 2024 6:10 காலை

புதுகை ரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை

பாராட்டு பெற்ற புதுகை சிவகாமி அம்மாள் ரத்ததான கழக நிர்வாகி நகர் மன்ற உறுப்பினர் மூர்த்தி உள்ளிட்டோர்

உலக இரத்தக் கொடையாளர்கள்( ஜூன் 14 ) தினம்.1901-ல்  A B O இரத்த வகையைக் கண்டுபிடித்த,நோபல் பரிசு பெற்ற டாக்டர் கார்ல் லேன்ட்ஸ்டைனர் அவர்களின் பிறந்தநாள் (ஜூன் 14, 1868) .

அவரின் சேவையைப் போற்றும் வகையிலும், இரத்ததானத் தின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற் காவும் மற்றும் இரத்தக் கொடையாளர்களின் சேவையைப் பாராட்டுவதற்காவும் இந்த நாள் உலக இரத்தக்கொடையாளர் தினமாக 2005ஆம் ஆண்டிலிருந்து உலக சுகாதார நிறுவனத் தால் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் உலகெங்கும் இருக்கும், ‘உதிரம் கொடுத்து உயிர்காக்கும்’ இரத்தக்கொடையாளர்கள் கொண்டாடப்படு கிறார்கள். 2023 ஆண்டுக்கான இந்த தினத்திற்கான ஸ்லோகம் “இரத்ததானம் செய்யுங்கள், பிளாஸ்மாவைக் கொடுங்கள்,
வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்'(Give blood, Give plasma, Share life , Share often) என்பதாகும்.

இந்த வகையில், இரத்ததானம் செய்யும் மரம் நண்பர்களின் இணைச் செயலர் மற்றும் புதுக்கோட்டை நகர்மன்ற உறுப்பினர் சா.மூர்த்தி குடும்பத்தினர், அவர்களின் ‘உயிர்காக்கும் சேவையைப் பாராட்டி, புதுக்கோட்டை மரம் நண்பர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர்.

மூர்த்தி குடும்பத்தில் , மூர்த்தி, அவர் துணைவியார் சித்ரா, மகன் ராம்பாரதி, சகோதரர்கள் ராமமூர்த்தி, கார்த்திக் மற்றும் வைத்தியலிங்கம்  என அனைவரும் இரத்தக் கொடையாளர்கள்.  இதில் இன்று மூர்த்தி, சித்ரா, ராமமூர்த்தி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் பாராட்டுப் பெற்றனர்.

புதுக்கோட்டை
பாராட்டு பெற்ற ரத்த கொடையாளர்கள்

மூர்த்தி, தன் தாயார் பெயரில் ‘சிவகாமி அம்மாள் இரத்தானக் கழகம்,’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் வழி இதுவரை 2500 க்கு மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

நிகழ்வில் மரம் நண்பர்களின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜி.எட்வின், சா.விஸ்வநாதன், செயலர் பழனியப்பா கண்ணன் , உறுப்பினர் பாரதவிலாஸ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மூர்த்தி குடும்பத்தினருக்கு பாராட்டும் வாழ்த்தையும் தெரிவித்தனர்.

மேலும், இந்நிகழ்வில் மருத்துவர் ஜி.எட்வினும், பழனியப்பா கண்ணனும் இரத்தக் கொடை சேவைக்காக பாராட்டப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top