ஈரோடு, டாடா குழுமத்தை சேர்ந்த தனிஷ்க் ஜூவல்லரி 51 வது கிளை கோபியில் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு லோட் டஸ் குழுமங்களின் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார்.
தனிஷ்க் நகை பிரிவின் தமிழக தலைமை அதிகாரி நரசிம்மன், மண்டல வர்த்தக பிரிவு தலைவர் ஷரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிர்வாக இயக்குனர்ராஜ சேகர் வரவேற்று பேசினார்.
டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.கே. வெங்கடராமன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடக்கி வைத்தார். இதில் டெக்ஸ்வேலி செயல் இயக்குனர் டி.பி.குமார் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் தனிஷ்க் நகை பிரிவின் கோவை மண்டல மேலாளர் ராஜா நன்றி கூறினார்.
இதுகுறித்து தனிஷ்க் ஜூவல்லரி நிர்வாகிகள் கூறும் போது. ‘திறப்பு விழாவை முன்னிட்டு, ஒவ் வொரு முறை நகை வாங்கும் போதும் வாடிக்கையாளர்க ளுக்குதங்க நாணயம் இலவச மாக வழங்கப்படுகிறது. இந்த சலுகை நாளை
(வெள்ளிக்கிழமை) நிறைவ டைகிறது. 3 ஆயிரம் சதுரடி யில் மிகப்பிரமாண்டமாக இந்த விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. தங்கம், வைரங்கள், நவரத்தினங் கள், வண்ணக்கற்கள் என பல்வேறுரகங்களில் செய்யப் பட்ட தனிஷ்க் நிறுவனத்தின் பிரத்தியேக வடிவமைப்பில் உருவான நகைகள் விற்ப னைக்கு வைக்கப்பட்டுள் ளன.
திருமண நகைகள் வாங் கும் வாடிக்கையாளர்களுக் கான சிறப்பு மையங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இங்கு தனிஷ்க் நிறுவனத்தின் பிரத்யேகதிருமண நகைகளுக் கான துணை பிராண்டான ரிவாவில் இருந்து பிரமிக்க வைக்கும் வகையிலான கவர்ச்சிகரமான நகைகள் விற்பனைக்கு வந்துள்ளன என்றனர்