Close
நவம்பர் 22, 2024 12:11 காலை

தஞ்சாவூர் மாவட்டத்தில்  மக்கள் நேர்காணல் முகாம்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் நாச்சியார் கோவிலில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாம்

தஞ்சாவூர் மாவட்டத்தில்  “மக்கள் நேர்காணல் முகாம்” மாவட்ட ஆட்சியர்  தீபக் ஜேக்கப் தலைமையில் அரசு தலைமை கொறடா  மயிலாடுதுறை நாடாளுமன்றஉறுப்பினர் செ. ராமலிங்கம் முன்னிலையில் (23.06.2023) நடைபெற்றது.

அரசுதலைமை கொறடா கோவி.செழியன்  தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவுக்கிணங்க பொது மக்களின்  குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் ஒருஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் நாச்சியார் கோவில் அறிஞர் அண்ணாதிருமணமண்டபத்தில் மக்கள் நேர்காணல் முகாம் இன்றுநடைபெற்றது. இம்முகாமில் இலவச வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்பஅட்டை, பட்டாமாற்றம். கல்விகடன் உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகள் அடங்கிய 250 பெறப்பட்ட மனுக்களை  விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.

மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வருவாய் துறைசார்பில் 112 பயனாளிகளுக்கு ரூபாய் 11,20,000 மதிப்பீட்டில் விலையில்லாவீட்டு மனை பட்டா,

சமூகபாதுகாப்புதிட்டத்தின் கீழ் 263 பயனாளிகளுக்குரூபாய் 2,83,000; மதிப்பீட்டில் நலத்திட்டஉதவிகளும்,முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் விபத்து நிவாரணத் தொகை 2 நபர்களுக்கு ரூபாய் 2,05,000 மதிப்பீட்டில் காசோலையும்,

குடிமைபொருள் வழங்கல் துறைசார்பில் 48 பயனாளிகளுக்கு புதியகுடும்பஅட்டைகளும்,வேளாண்மைமற்றும் உழவர் நலத்துறைசார்பில் 50 பயனாளிகளுக்குரூபாய் 1,51,039 மதிப்பிலான அனைத்துவிவசாய பயன்பாட்டு பொருட்களும், தோட்டக்கலை மற்றும் மழை பயிர்கள் துறைசார்பில் 2 பயனாளிகளுக்கு ரூபாய் 14,550 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்,

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூபாய் 10,60,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், மகளிர் திட்டம் சார்பில் 105 பயனாளிகளுக்குரூபாய் 7,35,000 மதிப்பீட்டில் இலவசதையல் இயந்திரமும்,மகளிர் குழுவிற்குகடன் உதவி 4 பயனாளிகளுக்கு ரூபாய் 5,70,000 இலட்சம்,

தனிநபர் கடன் ரூபாய் 10,000 காசோலை 1 நபருக்கும் என மொத்தம் 592 பயனாளிகளுக்குரூபாய் 41,48,589 மதிப்பிலான நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அரசுதலைமைகொறடா  கோவி.செழியன்  தெரிவித்தார்.

முன்னதாக வருவாய் துறை,வேளாண்மைதுறை, தோட்டக் கலைத்துறை,சமூகநலத்துறை,சுகாதாரத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் சார்பில் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்டார்.

இதில்; கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஒ.சுகபுத்ரா, கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பா.ஐவண்ணண், மாவட்டஊராட்சிக் குழு உறுப்பினர் சரவணன்,ஊராட்சிமன்றதலைவர்கள்  சி.அம்பிகாபதி (கூகூர்), மகேஸ்வரி உமாசங்கர் (நாச்சியார் கோவில்), கும்பகோணம் வட்டாட்சியர் பு.வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top