Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ராஜகோபால தொண்டைமான் உருவச்சிலைக்கு வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்கள் மரியாதை

புதுக்கோட்டை

புதுக்கோட்டைசமஸ்தான மன்னர் உருவச்சிலைக்கு மரியாதை செய்த வெங்கடேஸ்வரா பள்ளி மாணவ, மாணவிகள்

புதுக்கோட்டை சமஸ்தான மாமன்னர் ராஜகோபால தொண்டைமானின் 101ஆவது பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அவரது உருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவது மன்னரான மாமன்னர் ராஜகோபாலதொண்டைமான் 1922 ஆம்ஆண்டு ஜூன்மாதம் 23ஆம் நாள் புதுக்கோட்டையில் பிறந்தார். அவரது 101 -ஆவது  பிறந்தநாள் விழா புதுக்கோட்டை மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாமன்னர் இராஜகோபலதொண்டைமான் ஆட்சிகாலத்தில் புதுக்கோட்டை சமஸ்தான மக்கள் வளமுடன் நலமுடன் வாழ்ந்தனர்.இந்தியஅளவில்சமஸ்தானத்துக்கென்றுதனியாகஅம்மன்காசு என்ற நாணயத்தை வெளியிட்ட பெருமை தொண்டைமான் மன்னர் பரம்பரையைச் சேரும்.. இந்திய அரசாங்கம் சமஸ்தானங்களை இணைக்க வேண்டும் என்று அறிவித்தவுடன் முதன்முதலில் தமது சமஸ்தானத்தை இந்திய அரசாங்கத்துடன் இணைத்து வரலாற்றில் இடம் பிடித்த மன்னர் ராஜாஇராஜகோபாலதொண்டைமான் ஆவார்.

புதுக்கோட்டை மாவட்டஆட்சியர் அலுவலகத்துக்குஅவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சமஸ்தான மன்னரின் பெருமைகளை விளக்கி புதுக்கோட்டைநம் புகழ்க்கோட்டை எனும் பாடல் எழுதியதன் மூலம் உலகத் தமிழர்களால் பாராட்டப்பட்ட கவிஞர், பள்ளியின் முதல்வர், தமிழ்ச்செம்மல் தங்கம்மூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஸ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக். மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை சமஸ்தான கடைசி மன்னர் ராஜாராஜகோபாலதொண்டைமான் அவர்களின் 101 -ஆவது  பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து அங்குள்ள மாமன்னர்ராஜாராஜகோபால தொண்டைமான் அவர்களின் உருவச் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும், மாணவ,  மாணவிகள் மன்னர் அரண்மனையை சுற்றிப்பார்த்து வியந்தனர். வரலாற்றுப் பெருமைகளை மாணவர்கள் அறிந்து மகிழ்ச்சிஅடைந்தனர்.

நிகழ்வில், பள்ளியின்துணை முதல்வர் குமாரவேல், மேலாளர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிராமசுந்தரி, ஆசிரியர்கள் துர்காதேவி, சின்னையா, ரவிக்குமார், பாலமுருகன், காசாவயல்கண்ணன் உள்ளிட்டஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top