Close
செப்டம்பர் 20, 2024 4:06 காலை

மக்கள் குறைதீர்க்கும் நாள்… புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் 315 பேர் மனு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற குறைகேட்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் (26.06.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 315 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.

இம்மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் , இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளு மாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.14,000 வீதம் ரூ.70,000 மதிப்புடைய தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகளை, மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

மேலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், குளத்தூர் வட்டம், உலகத்தான்பட்டி, கிள்ளுக் கோட்டையைச் சேர்ந்த தனபால் என்ற கட்டுமானத் தொழிலாளி விபத்தில் இறந்ததையொட்டி, அவரது வாரிசுதாரர்கள் 5 பேருக்கு தலா ரூ.1,00,000 வீதம் ரூ.5,00,000 நிதியுதவிக்கான ஆணைகளை ஆட்சியர் மெர்சி ரம்யா, வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .வெ.தங்கராஜ், உதவி கணக்கு அலுவலர் எம்.கருப்பையா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top