Close
செப்டம்பர் 19, 2024 11:23 மணி

குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம்: வேங்கைவயலைச் சேர்ந்த 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

புதுக்கோட்டை

வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஓ சோதனைக்கானவர்கள் 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த்தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் மரபணு சோதனைக்கு உள்படுத்தக் கோரிய வேங்கைவயலைச் சேர்ந்த 8 பேர், புதுக்கோட்டை எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் தலித் குடியிருப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 11 பேருக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் சிபி சிஐடி போலீஸார் அனுமதி பெற்றனர். இவர்களில் 3 பேர் மட்டுமே மரபணு பரிசோதனைக்கு சம்மதித்து ரத்த மாதிரிகளைக் கொடுத்தனர்.
மீதமுள்ள 8 பேர் சோதனைக்கு வரவில்லை. அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட எங்களிடம் எந்தக் கருத்தையும் கேட்காமல் எங்களிடமே மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு நடைபெற்று வரும் நீதிமன்றம் அவர்களின் கருத்தைக் கேட்டு மரபணு பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட அந்த 8 பேரின் கருத்தைக் கேட்கும் வகையில் மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென  கடந்த  28 .6.2023 -ஆம் தேதி அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை பகலில் நீதிமன்றத்தில் ஆஜராானார்கள்.
சிபி சிஐடி போலீஸார் மரபணு சோதனை நடத்தக் கோரு வதை அவர்கள் 8 பேருக்கும் தெரிவித்த நீதிபதி எஸ். ஜெயந்தி, தங்களின் கருத்தை சனிக்கிழமை மீண்டும் ஆஜராகி தெரிவிக்கலாம் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top