Close
செப்டம்பர் 20, 2024 12:51 காலை

காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த மாவட்ட ஏஐடியூசி சங்கத்துடன் இணைக்கப்பட்ட திலகர் திடல் மாலை நேர காய்கறி அங்காடி வியாபார தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம்

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும் திலகர் திடல் மாலை நேர காய்கறி அங்காடி தெரு வியாபார தொழிலாளர் சங்க சிறப்பு பேரவை கூட்டம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்ட ஏஐடியூசி சங்கத்துடன் இணைக்கப்பட்ட திலகர் திடல் மாலை நேர காய்கறி அங்காடி வியாபார தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம்  தஞ்சாவூர் கீழராஜவீதி மாவட்ட அலுவலகத்தில் சங்கத் தலைவர் வெ.சேவையா தலைமையில் நடைபெற்றது.

செயலாளர் கே மணிகண்டன் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில் ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், மாநிலச்செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர் தி. கோவிந்தராஜன், தெருவியாபார தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி. முத்துக்குமரன், அரசு பணியாளர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ந.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

கூட்டத்தில் தக்காளி உள்ளிட்டு அன்றாட சமையலுக்கு பயன்படுகின்ற அரிசி,காய்கறி, மளிகை பொருட்கள் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. ஏழை, எளிய மக்கள் அன்றாடம் உயர்ந்து வருகின்ற விலைவாசி உயர்வால் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர், இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் அரிசி,காய்கறி,. மளிகை உள்ளிட்ட உணவு பொருட்கள் விலையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் .

தஞ்சாவூர்
பேரவைக்கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள்

தமிழ்நாடு அரசு கூட்டுறவு அங்காடிகள் மூலம் தக்காளி, பருப்பு உள்ளிட்டபொருட்கள் விற்பனை செய்து வருவதை இப் பேரவை வரவேற்கிறது, அன்றாடம் சமையலுக்கு தேவைப்படுகின்ற மளிகை, காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கூட்டுறவு அங்காடி நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திலகர் திடல் மாலை நேர அங்காடியில் சுமார் 50 கடைகள் செயல்பட்டு வருகின்றன, வயதானவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் இங்கு வியாபாரம் செய்து செய்வதும், அதிகமான மக்கள் பொருட்கள் வாங்க வந்து செல்வதுமான இடத்தில் அடிப்படை வசதிகளான கழிவறை வசதி, குடிநீர் வசதி, கடைகளுக்கு மின்சார வசதி செய்து தர மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது.

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விராத ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஆகஸ்ட் 9 சென்னையில் நடைபெறும் பெருந்திரள் போராட்டத்தை விளக்கி வருகிற ஜூலை 29 ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் அனைத்து தொழிற்சங்க மாவட்ட மாநாட்டில் திரளாக பங்கேற்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top