Close
நவம்பர் 21, 2024 10:55 மணி

திருமயம், அரிமளம் ஒன்றியப் பகுதிகளில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் மற்றும் அரிமளம் ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு முடிவுற்றப் பணிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மற்றும் அரிமளம் ஒன்றியப் பகுதிகளில், பல்வேறு முடிவுற்றப் பணிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  (19.07.2023) திறந்து வைத்தார்.

பின்னர்  அமைச்சர்  தெரிவித்ததாவது: கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.  வருமுன் காப்போம் திட்டம், கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் உள்ளிட்ட மருத்துவ திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

திருமயம் ஒன்றியம், கே.பள்ளிவாசல் கிராமத்தில், நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.34.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள, கால்நடை மருந்தக புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட் டுள்ளது. வருடந்தோறும் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் மருந்துகள் அரசால் வழங்கப்படும். ரூ.60,000 மதிப்பில் அறையணிகள் மற்றும் 50,000 மதிப்பில் சிகிச்சை உபகரணங்கள் அரசால் வழங்கப்படும்.

இந்த கால்நடை மருத்துவ முகாமினை பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு, தங்களது கால்நடை களை நோயின்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும் சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் பராமரிக்க வேண்டும். நாட்டு மாடுகளை கிராமப்புற மக்கள் வளர்த்து தங்களது குடும்ப பொருளாதாரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

அரிமளம் ஒன்றியம், கும்மங்குடி ஊராட்சி, நமக்கு நாமேத் திட்டத்தின்கீழ், மீனிக்கந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள ரூ.9 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் மற்றும் ரூ.7.5 லட்சம் செலவில் கலையரங்கம் புதிய கட்டடத்தினையும், திருமயம் ஒன்றியம், லெம்பலக்குடி ஆதிதிராவிடர் காலனியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 இலட்சம் செலவில் புதிய கலையரங்க கட்டடம், லெம்பலக்குடி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.23.57 லட்சம் செலவில் லெம்பலக்குடி ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம், லெம்பலக்குடி ஊராட்சி, குவாரி திட்டத்தின்கீழ், ரூ.45 லட்சம் செலவில் பன்னீர்பள்ளம் சமுதாயக் கூடம் கட்;டடம் ஆகிய முடிவுற்றப் பணிகள் தொடக்கி  வைக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும் என மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் (பொ) மரு.எஸ்.ராமச்சந்திரன், அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.மேகலாமுத்து, வேளாண் இணை இயக்குநர் திரு.பெரியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராம.சுப்புராம், ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.அழகு (எ) சிதம்பரம், உதவி இயக்குநர்கள் மரு.வெங்கடேசன், மரு.பாபு, உதவி மருத்துவர்கள் மரு.திருநாவுக்கரசு, மரு.பிரபு, மரு.தெட்சிணாமூர்த்தி, மரு.சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.சி.நளினி, ஊராட்சிமன்றத் தலைவர் காத்தாயி விஸ்வநாதன், திரு.ஆர்.கணேசன், திரு.ராசு செந்தில்குமார், திரு.ஆர்.எம்.கருப்பையா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top