Close
செப்டம்பர் 20, 2024 3:33 காலை

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 22 -ஆம் ஆண்டு நினைவேந்தல்

புதுக்கோட்டை

நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் நினைவேந்த நிகழ்வையொட்டி அவரது உருவப்படத்துக்கு மரியாதை செய்த எம்எல்ஏ முத்துராஜா மற்றும் சிவாஜி ரசிகர்கள்

உலக அரங்கில் முதல் மரியாதை கண்ட கலைத்தாயின் மூத்த மகன் சிங்கத்தமிழன் செவாலியே சிவாஜி கணேசன் 22 -ஆம் ஆண்டு நினைவேந்தல்  நிகழ்ச்சி  புதுக்கோட்டை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் ஏ.சுப்பையா தலைமையில் மச்சுவடியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர் மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் கண.மோகன்ராஜா, 10 -ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மை.பால்ராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிவாஜி கணேசன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் சிவாஜி சமூக நலப் பேரவை நகரத் தலைவரும், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவருமான பி.அசோகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் முத்தன் அரசகுமார், பொருளாளர் ஆர்.சங்கர், புதுகை புதல்வன்,  பீர் முகமது மற்றும் சிவாஜி சமூகநல பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top