புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் முனைவோர் களுக்கான அரசு மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் ஒருங்கிணைந்து நடத்தும், தொழில்க ளுக்கான அரசு மானியத்துடன் கூடிய தொழில் கடன் முகாமினை, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா (24.07.2023) தொடக்கி வைத்து, தொழில் கடன் உதவிகளை வழங்கினார்.
இளைஞர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற கடன் தொடர்பு முகாமில், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத் துறை ஆகிய துறைகளின் சார்பில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் 1,584 பயனாளிகளுக்கு ரூ.82.19 கோடி முதலீட்டு தொகைக்கான கடன் உதவிகளை தொழில் முனைவோர்களுக்கு ஆட்சியர் மெர்சி ரம்யா வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் சு.திரிபுரசுந்தரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எம்.ஆனந்த், தாட்கோ மேலாளர் ஆர்.விஜயகுமார், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் கலைச்செல்வி, புதுக்கோட்டை மாவட்ட சிறு தொழில் அதிபர்கள் நலச்சங்கத் தலைவர் ராஜ்குமார், வங்கி மேலாளர்கள், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.