Close
செப்டம்பர் 20, 2024 3:45 காலை

திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 

புதுக்கோட்டை

திருநங்கைகளுக்கான சிறப்பு குறை தீர் முகாமில் ஆட்சியர் மெர்சி ரம்யாவிடம் மனு அளித்த திருநங்கை

புதுக்கோட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம்  நடைபெற்றது,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  தலைமையில் (04.08.2023) நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திட ஏதுவாய் மாதம்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமைகளில் திருநங்கைகள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

அதன்படி இன்றைய தினம் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்,  ஆட்சியர்  மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 35 திருநங்கையர்கள் கலந்து கொண்டு, மருத்துவ முகாம் நடத்த கோருதல், குடும்ப அட்டை மற்றும் வீட்டுமனைப் பட்டா தொடர்பாக 8 மனுக்களை திருநங்கைகள் வழங்கினார்கள்.

இம்மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.ஸ்ரீதர், துணை ஆட்சியர் (பயிற்சி) .ஜி.வி.ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top