Close
செப்டம்பர் 19, 2024 11:04 மணி

தாட்கோ மூலம் எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு அனிமேசன் பயிற்சி

புதுக்கோட்டை

தாட்கோ மூலம் மாணவர்களுக்கு அனிமேசன் பயிற்சி

தாட்கோ மூலமாக TCS ION நிறுவனத்தின் சார்பாக  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்தத ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவ மாணவிகளுக்கு தகவல் தொழில்நுட்பம், Animation போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில்  12 -ஆம்  வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த  மாணவ, மாணவிகளுக்கு TCS ION நிறுவனத்துடன் இணைந்து தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியான

Data analytics and Reporting. Applied cloud computing, Practical Approach to cyber security, Machine learning for Real world Application, Intelligent Game Design and its Applications மேலும் Animation சம்பந்தப்பட்ட பயிற்சியான Graphic Designing (Professional), Motion Graphics போன்ற பயிற்சிகளை இணையதளம் வழியாக பயிற்றுவித்து முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்படவுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியினை B.E/B.Tech/BCA/B.Sc(CS)/B.Sc{CS&IT)MCA/M.Sc(CS)/M.Sc(CS&IT) அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் அல்லது கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் 18 முதல் 28 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

அனிமேஷன் (Animation) சம்பந்தப்பட்ட பயிற்சியினை பெற 12 -ஆம்  வகுப்பு அல்லது ITI தேர்ச்சி பெற்ற 18 முதல் 28 வயது நிரம்பிய மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் TCS ION நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் NOT (National Qualifier Test) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வு முறையானது ஆங்கில வழியில் TCS ION நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.

இத்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் TCS ION நிறுவனத்தால் வழங்கப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அனிமேஷன் சம்பந்தப்பட்ட பயிற்சியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம். இப்பயிற்சியை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும். இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, புதுக்கோட்டை 04322-221487 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top