Close
ஏப்ரல் 3, 2025 11:34 மணி

அடிப்படை வசதிகள் கோரி சோழவந்தான் எம்.எல்.ஏ விடம் மனு

மதுரை

அடிப்படை வசதிகள் கோரி எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில், அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி வெங்கடேசன் எம்எல்ஏ விடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் ஊராட்சியில், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் , வெங்கடேசன் எம்எல்ஏ விடம் கோரிக்கை மனு  அளித்தனர்.

முள்ளிபள்ளம் ஊராட்சியில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் இரண்டாவது பஸ் ஸ்டாப் வடக்குத்தெரு மற்றும் சங்கையாகோயில் உள்ளிட்ட இடங்களில் அருகில் உயர்மட்ட மின்விளக்கு அமைத்தல்.

நாடக மேடை அருகிலுள்ள புது தெருவில் மின்விளக்கு மற்றும் சிமெண்ட் சாலை அமைத்தல் மற்றும் அனைத்து தெருக்க ளிலும் சிசிடிவி கேமரா அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி இணை செயலாளர் மதன் பிள்ளை, சோழவந் தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனிடம் வழங்கி னார்.
உடன்  மாவட்ட நிர்வாகிகள் தங்க ராஜா, ராஜபாண்டி, விக்னேஷ், நாகராஜ் ஆகியோர் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top