Close
செப்டம்பர் 20, 2024 1:28 காலை

மதுரையில் வைகை விரைவு ரயிலுக்கு பிறந்தநாள் கொண்டாடிய பயணிகள்

மதுரை

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 46 வது பிறந்தநாள் கொண்டாடிய பயணிகள்

மதுரையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 46- ஆவது பிறந்த நாளை  ரயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்திய நாடு முழுவதும் 77-ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் கொடி ஏற்றி வைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதராமாக திகழும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 46-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ரயில் பயணிகள் கேக் வெட்டியும், ரயில் ஓட்டுனர்களுக்கு மரியாதை செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

கடந்த 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி   வைகை விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.  சென்னை மற்றும் மதுரைக்குச் செல்லும் பகல் நேர விரைவு ரயிலாக உள்ள இந்த ரயில், தென் மாவட்ட வணிகர்கள் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.

குறிப்பாக, இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே மீட்டர் கேஜ் ரயில் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்ற இந்தியாவின் அதி விரைவு ரயில் என்ற பெருமையைப் பெற்றது. ஆசியாவிலேயே மீட்டர் கேஜ் பாதையில் அதிவேக மாக இயக்கப்பட்ட ரயில் என்ற பெருமையும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு உண்டு.

நாள்தோறும் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.35 மணிக்கு சென்னையை சென்றடை யும். மொத்த பயண நேரம் 7 மணி 25 நிமிடங்கள். அதே போன்று மறு மார்க்கமாக சென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணியளவில் மதுரை வந்தடையும். இதில், மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்கள் ஆகும்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் முதல் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாக வைகை எக்ஸ்பிரஸ் 1977 முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் சென்னை – மதுரை, மதுரை- சென்னை மார்க்கமாக தினமும் சுமார் 5 ஆயிரம் பேர் பயணிக்கின்றனர்.

ஒரு வழிப் பயண தொலைவு என பார்த்தால் 497 கி.மீ. ஆண்டிற்கு 3 லட்சத்து 65 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்கிறது. இதுவரை 46 ஆண்டில் தோராயமாக 1 கோடியே 77 லட்சத்தி 30 ஆயிரம் கி.மீ. தொலைவு பயணம் செய்து சாதனை படைத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top