Close
நவம்பர் 22, 2024 12:06 காலை

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர் மெர்சி ரம்யா. உடன் எம்எல்ஏ முத்துராஜா

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக் கான சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தொடக்கி வைத்தார்.

புதுக்கோட்டை இராணியார் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி யில் நடைபெற்ற  மாற்றுத்திறனாளிகளுக் கான சிறப்பு மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா இன்று (19.08.2023) தொடக்கி வைத்து, 22 பயனாளிக ளுக்கு ரூ.1,08,500 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர்  ஆட்சியர்  தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலனில் மிகுந்த அக்கரைகொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் தமிழக அரசு, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பித்திடும் வகையில், தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை, ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை மற்றும் பிற மறுவாழ்வு உதவிகள் வழங்கிட 100 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி ஆகிய 3 வட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத் துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கி ணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில்,  புதுக்கோட்டை இராணியார் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி யில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கி வைக்கப்பட்டது. இம்முகாம் காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நடைபெற்று வருகிறது. இம்முகாமில் 250 -க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனா ளிகள் பங்கேற்றதில், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இம்முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று டன் கூடிய அடையாள அட்டை வழங்குதல், ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை விண்ணப் பம் பெறுதல், சரிபார்த்தல் மற்றும் பிற மறுவாழ்வு உதவிகள் வழங்கிட பரிந்துரைகள் செய்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இம்முகாம், 16.09.2023 அன்று திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்; மற்றும் 23.09.2023 அன்று ஆலங்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியிலும் நடைபெறவுள்ளது.

எனவே மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற அரசு நலத்திட்டங் களை உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும் என  ஆட்சியர்மெர்சி ரம்யா  தெரிவித்தார்.

இம்முகாமில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, வட்டாட்சியர் விஜயலட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top