Close
செப்டம்பர் 19, 2024 11:08 மணி

கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டம் தொடக்கம்

ஈரோடு

கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தை தொடக்கி வைத்த நகராட்சித்தலைவர் என்.ஆர். நாகராஜ்

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழக முழுவதும் உள்ள அரசு துவக்க பள்ளியில்  துவங்கப்பட்டது.

இத்திட்டத்தில் திங்­கள் கிழமை காய்கறி சாம்­பா­ருடன் கூடிய
ரவா உப்புமா / சேமியாஉப்புமா / அரிசி உப்புமா/ கோதுமை ரவை உப்­புமா.

செவ்­வாய் கிழமை– காய்­கறி சாம்­பா­ருடன்கூடிய ரவா காய்­கறி கிச்­சடி/ சேமியா காய்­கறி கிச்­சடி/ சோள காய்­கறி கிச்­சடி /
கோதுமை ரவை கிச்­சடி;

புதன்கிழமை – காய்­கறிசாம்­பா­ருடன் கூடிய ரவாபொங்­கல் / வெண் பொங்கல்;

வியாழக்கிழமை – காய்­கறி சாம்­பா­ருடன்கூடிய சேமியா உப்புமா /அரிசி உப்புமா / ரவா உப்­புமா / கோதுமை ரவை
உப்புமா;

வெள்ளிக்கி­ழமை – காய்­கறி சாம்­பா­ரு­டன் கூடிய சேமியா காய்கறி கிச்­சடி / சோள காய்­கறிகிச்­சடி / ரவா காய்­கறி கிச்
சடி / கோதுமை ரவை கிச்சடி ஆகியவை மாணவர்­களுக்கு முதல­மைச்­சரின் காலை உணவுத்திட்­டத்தின் கீழ் வழங்­கப்­படும்.

ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்­கப்­ப­டும் காலைஉணவுக்­கான மூலப்பொருட்­க­ளின் அளவு 50கிராம் அரிசி / ரவை /கோதுமை ரவை /சேமியா. மேலும், அந்தந்த இடங்­க­ளில் விளையும் சிறுதானியங்­கள் /சாம்­பா­ருக்­கான பருப்பு 15கிராம் மற்­றும் உள்ளூரில்டைக்­கக்கூடிய காய்­க­றி­கள், ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்­க­ளாவது உள்ளூ­ரில் கிடைக்­கக்கூடிய சிறுதானியங்­க­ளால் தயா­ரிக்­கப்­பட்ட காலை உணவு வழங்­கப்­ப­டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை, கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் நகராட்சி துவக்கப்பள்ளியில் நகராட்சி தலைவர் என் ஆர் நாகராஜ் துவக்கி வைத்தார்.

அருகில் ஆணையாளர் சசிகலா நகர்மன்ற உறுப்பினர்கள் விஜய் கருப்புசாமி மகேஸ்வரி மற்றும் அலுவலர்கள் ஜோதிமணி சோழராஜ்மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top