Close
செப்டம்பர் 20, 2024 1:38 காலை

ஈரோடு மாநகராட்சியில் ரூ.3 கோடியில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

ஈரோடு

கவுன்சிலர் சபுராமா ஜாபர் சாதிக் தலைமையில் . சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம் தொடக்கி வைத்தார்.

ஈரோடு மாநகராட்சியில் ரூ.3 கோடியில் பழுதடைந்த சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மாநில நிதிக்குழுத் திட்டத்தின்கீழ் ரூ.3.09 கோடி செலவில் ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட 43 ஆவது வார்டு, 52 மற்றும் 53ஆவது வார்டுகளில் பழுதடைந்த 6 கி.மீ. சாலையை மேம்படுத்தும் பணிகளுக்கான பூமிபூஜை விழா நடை பெற்றது.

ஈரோடு  மரப்பாலம் சமாதானம் சத்திரம் பகுதியில் நடை பெற்ற விழாவிற்கு 43-ஆவது வார்டு கவுன்சிலர் சபுராமா ஜாபர் சாதிக் தலைமை வகித்தார். 52 வார்டு கவுன்சிலர் சாந்தி பாலாஜி, 53 -ஆவது கவுன்சிலர் ரமணி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம் தொடக்கி வைத்தார். காங்கிரஸ் கட்சியின் 4 -ஆவது மண்டல தலைவரும், முன்னாள் மாநகர கவுன்சிலருமான ஜாபர்சாதிக், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி 4 -ஆம் மண்டலத் தலைவர் குறிஞ்சி தண்டபாணி, காங்கிரஸ் கவுன்சிலர் ஈ.பி.ரவி, காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் பணிகள் தொடக்கியுள்ளதன் மூலம் நீண்ட நாள்களாக பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள் ளதால்  இப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சிய டைந்தனர்.

#செய்தி- மு.ப.நாராயணசுவாமி#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top