Close
நவம்பர் 22, 2024 5:35 காலை

அறந்தாங்கி ரயில் நிலையத்தில் தமுஎகச நிர்வாகி மீது தாக்குதல்…

புதுக்கோட்டை

தாக்குதல்

விளக்கம் கேட்ட  தமுஎகச நிர்வாகி மீது  அறந்தாங்கி ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு அலுவலகம், பேருந்து நிலையம், போன்றவற்றில் கழிவறை, வாகன நிறுத்தம் இவைகளுக்கு எதனடிப்படையில் கட்டணம் வசூலிக்கபடுகிறது.

பேருந்து நிறுத்தத்தில் கட்டப்படும் கழிவறை மக்கள் வரிப்பணம், அதற்கு தண்ணீர் மற்றும் சுத்தபடுத்துவது கூட மக்கள் வரிப்பணத்தில் தான்…

அப்படி இருக்கையில் தனியாருக்கு எதற்காக கட்டணம் வசூலிக்க அனுமதி கொடுக்கபடுகிறது.

சரி… அப்படி கொடுத்தாலும் யாருக்கு எத்தனை வருட குத்தகை, அனுமதிக்கபட்ட கட்டணத்தொகை, வசூலிப்பவருக்கான ஐடி இவைகளை சரியாக பின்பற்ற வேண்டுமா? வேண்டாமா?

அறந்தாங்கி பேருந்து நிலைய கழிப்பறை எந்த கட்டணமும் இன்றிதான் செயல்பட்டது. திடீரென ஒருநாள் புளுஷீட் வைத்து அடைத்து  தற்போது கட்டணம் வசூலித்துவருகின்றனர் .

அதேபோல் அறந்தாங்கி இரயில்வே ஸ்டேசனில் தீடீரென வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிக்க வந்தவர்களிடம் அவர்களின் அடையாள அட்டையை கேட்ட அறந்தாங்கி தமுஎகச உறுப்பினர் மற்றும் முற்போக்கு பேச்சாளருமான கவிஞர் ஜீவியையும் அவர் மகனையும் தாக்கியுள்ளனர் வசூல்வேட்டை குண்டர்கள்.

இந்த தவறின் ஆரம்பம் எங்கே? யார் வசூலில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியாததால் தானே! அறந்தாங்கிக்கே அறிவொளி விளக்கேற்றிய ஒரு உன்னதமான மக்கள் பணியாளருக்கே இந்த நிலைமை என்றால்… சாதாரண மக்களின் நிலைமை?

தாக்கபட்ட ஜீவி அவர்களுக்காக மட்டும் இந்த கோரிக்கையை வைத்தால் அது எங்கள் அபிமானத்திற்கு உரிய தோழருக்காக கேட்டது போலாகிவிடும்.

தோழரின் சார்பாக ஒட்டுமொத்த மக்களின் குரலாக இந்த தாக்குதலின் ஆரம்பப் புள்ளியை அரசு திருத்தவேண்டும். தாக்கிய குண்டர்களை தண்டிக்க வேண்டும்.

அதுமட்டுமில்லாமல்….அறந்தாங்கியில் இருந்து சென்னை செல்லும் SETC பேருந்து கட்டணம் 425 ரூபாய், ஆனால் டிக்கெட் பேருந்து நிலையத்தில் இருக்கும் ரெத்தினநாதன் ஸ்வீட் ஸ்டாலில் தான் வாங்க வேண்டும். அதற்கு கட்டணம் 480 ரூபாய்.

மக்களின் மனம் நொந்து புலம்பும் சப்தம்… இந்த சம்பவத்தின் மூலமாக சப்தமாக உரக்க எதிரொலிக்கும், அல்லது எதிரொலிக்க வைக்க வேண்டும்.

#அண்ணாதுரை காசிநாதன் ( முகநூல் பதிவு)#

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top