Close
செப்டம்பர் 20, 2024 3:34 காலை

கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பதாரர்களின் உண்மைத்தன்மை அறியும் கள ஆய்வுப்பணி தீவிரம்

புதுக்கோட்டை

கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதாரர்களை கள ஆய்வு செய்த ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று களஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் 4,24,734  பேர் விண்ணப்பித்துள்ளனர்.இந்த விண்ணப்பதாரர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பத்தின் உண்மைத் தன்மை குறித்து களஆய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா (29.08.2023) மேற்பார்வையிட்டார்.

பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சர்  27.03.2023 அன்று சட்டமன்றத்தில்ஆற்றிய உரையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக நீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக வரலாற்றில் விளங்கும் வகையில் மாதம் ரூ.1,000 வழங்கிடும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” ஏறத்தாழ ஒருகோடி குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

அதனடிப்படையில், தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும்ரூ.1000- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள், முதல்கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடத்தப்பட்டதில் 2,54,090 நபர்களும் மற்றும் இரண்டாம் கட்டமாக 05.08.2023 முதல் 13.08.2023 வரையில் நடைபெற்ற முகாமில் 1,59,742 நபர்களும் மற்றும் 18.08.2023 முதல் 20.08.2023 வரையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 10,902 நபர்களும் என ஆக மொத்தம் 4,24,734 நபர்களிடமிருந்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை பகுதியில் கள ஆய்வு செய்த ஆட்சியர் மெர்சி ரம்யா

அதன்படி பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களை 25.08.2023 முதல் வீடுவீடாகச் சென்றுதொடர்புடைய அலுவலர்களால் களஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் களஅலுவலர் களால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுப் பணிகள் மண்டல அலுவலர்கள் மூலம் செயலி உதவியுடன்மேற்பார்வையி டப்பட்டு வருகிறது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், நார்த்தாமலை சமத்துவபுரம், சத்தியமங்கலம் கள்ளர்தெரு மற்றும் புதுக்கோட்டை வட்டம், நகராட்சி மேல 4 -ஆம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு தகுதியான நபர்கள் பயனடையும் வகையில் களஆய்வு பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது எனஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின்போது, வட்டாட்சியர்கள் சக்திவேல் (குளத்தூர்), விஜயலட்சுமி (புதுக்கோட்டை) மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top