Close
நவம்பர் 22, 2024 12:37 காலை

புதுக்கோட்டை ஆட்டுச்சந்தையில் விற்பனை சரிவால் விவசாயிகள்-வியாபாரிகள் ஏமாற்றம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச்சந்தை

புதுக்கோட்டையில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டு சந்தையில் வர்த்தகம் ஒரு கோடியை தாண்டினாலும் ஆடுகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.

புதுக்கோட்டை சந்தப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சந்தைக்கு புதுக்கோட்டை மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் விவசாயிகளும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

கடந்த ஆடி மாதம் ஆடுகளின் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், ஆவணி மாதம் பிறந்த பின் கடந்த வாரம் இந்த ஆட்டு சந்தையில் 2 கோடி ரூபாய் வரையில் வர்த்தகம் நடைபெற்றதுடன் ஆடுகளின் விலையும் உயர்ந்து விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இனி தொடர்ந்து சுப முகூர்த்த தினங்கள் திருவிழாக்கள் வருவதால் ஆடுகளின் விலை அதிகரிக்கும் என நம்பிக்கையோடு விவசாயிகளும் வியாபாரிகளும் காத்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற  ஆட்டுச் சந்தையில் செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து விற்பனையானதால் வியாபாரிகளும் விவசாயிகளும் வேதனடைந்தனர்.

மொத்த வர்த்தகம் ஒரு கோடியை தாண்டி விற்பனையா னாலும் ஒரு ஆட்டுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையில் விலை குறைந்து விற்பனையாவதாகவும் ஆடுகளை வாங்க  பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டாததால் விற்பனை மந்தமாக உள்ளது என்றும் இதனால் விவசாயிகளும் ஆடுகளை விற்க வந்த வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள் ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top