புதுக்கோட்டை மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ரூ.83.14 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் (04.09.2023) நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 407 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், போலியோ, மனவளர்ச்சி குன்றிய மற்றும் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட 6 நபர்களுக்கு ரூ.50,000 மதிப்பி லான காலிப்பர் உதவி உபகரணங்கள்.
தாட்கோ சார்பில், தூய்மை பணியாளர் நலவாரியத்தின் 10 பயனாளிகளுக்கு ரூ.81.99 லட்சம் மதிப்பிலான வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறையின் சார்பில் பதிவு பெற்ற வக்பு நிறுவனத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் உலமாக்களுக்கு, புதிய இருசக்கர மோட்டார் வாகனம் வாங்குவதற்கு மானியமாக தலா ரூ.25,000 வீதம் 2 பயனாளிகளுக்கு ரூ.50,000 மானியத் தொகைக்கான காசோலைகள்.
தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் 1330 திருக்குறளை முற்றோதல் செய்த, அறந்தாங்கி ஒன்றியம், மேல்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயின்ற மு.கஜீவன் என்ற மாணவனுக்கு ரூ.15,000 -க்கான காசோலை மற்றும், முதலமைச்சரின் பாராட்டுச் சான்றிதழ்.
அகவை முதிர்ந்த தமிழறிஞர் உதவித்தொகைப் பெறும் 3 நபர்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகை ஒப்பளிப்பு அரசாணை உள்பட மொத்தம் ரூ.83.14 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் மெர்சி ரம்யா.
இக்கூட்டத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யது முகம்மது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.