Close
நவம்பர் 22, 2024 12:34 காலை

காசிமேட்டில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை ரூ. 75 லட்சத்தில் சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

சென்னை

சென்னை காசிமேடு பகுதியில் பழுதடைந்துள்ள நிலையில் காணப்படும் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் மறு சீரமைக்கும் பணிகளை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த ஆர்.கே. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர்.

சென்னை,காசிமேடு பகுதியில் பழுதடைந்து காணப்படும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் மறு சீரமைக்கும்   பணிகளை ஆர். கே. நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜே. எபினேசர் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்
 சென்னை காசிமேடு பகுதியில் சிங்காரவேலர் நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இக்குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டதால் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்ததையடுத்து இவ்வீடுகளை  சீரமைத்து தருமாறு குடியிருப்பு வாசிகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது .
இதனையடுத்து இவ்வீடுகளை ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மறு சீரமைக்க வாரியம் முடிவு செய்தது. இதன்படி சுமார் 210 வீடுகளை சீரமைக்கும் திட்டத்திற்கான தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆர். கே. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜே. எபினேசர் கலந்து கொண்டு மறு சீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார்.
மேலும் இதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு சுமார் 18 மாதங்களில் அனைத்து வீடுகளும் முழுமையாக சீரமைக்கப்படும். இதில் வசித்து வந்த மக்களுக்கு வீடுகள் முழுமையாக சீரமைக்கும் வரை வெளியே வாடகை வீடுகளில் தங்கிக் கொள்வதற்காக மாற்று ஏற்பாடுகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி தண்டையார் பேட்டை மண்டலக்குழு தலைவர் நேதாஜி யு.கணேசன், திமுக பகுதி செயலாளர் மற்றும் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top