Close
செப்டம்பர் 19, 2024 11:23 மணி

சென்னை ஆர். கே.நகர் தொகுதியில் ரூ. 47 லட்சம் செலவில் புதிய கட்டமைப்பு வசதிகள்

சென்னை

சென்னை ஆர் .கே நகர் தொகுதி சிவாஜி நகரில் புதிய ரேஷன் கடையை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினர் ஜே. ஜே. எபினேசர். உடன் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் ஆகியோர்

ஆர். கே.நகர் தொகுதியில் ரூ. 47 லட்சம் செலவில் புதிய கட்டமைப்பு வசதிகளை   ஜே .ஜே.எபினேசர் எம் எல் ஏ திறந்து வைத்தார்.
சென்னை ஆர். கே .நகர் பகுதியில் ரூ. 47 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரேஷன் கடை, உடற்பயிற்சி மையம், நீத்தார் நினைவு மண்டபம் உள்ளிட்டவைகளை சட்டப்பேரவை உறுப்பினர் ஜே. ஜே. எபினேசர் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்
 ஆர். கே. நகர் தொகுதியில் அமைந்துள்ள சிவாஜி நகர், அஜீஸ் நகர்  உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5000-க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரேஷன் கடையில் பொருள்களை பெற்று வந்தனர் .
இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளான நிலையில் புதிய ரேஷன் கடை அமைத்து தருமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து இப்பகுதியில் நாம்கோ கூட்டுறவு நிறுவனம் சார்பில் புதிய ரேஷன் கடை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக புதிய கட்டடமும் கட்டப்பட்டுள்ளது
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவில்  சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜே. எபினேசர் கலந்து கொண்டு ரூ 11 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடையைத் திறந்து வைத்து முதல் விற்பனையையும் தொடக்கி வைத்தார்.
மேலும் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள பெரியார் பூங்காவில் ரூ  9 லட்சம் செலவில்  உடற்பயிற்சி மையம், புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ. கோயில் தெருவில் ரூ 27 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள நீத்தார் நினைவு கூடம் உள்ளிட்டவைகளை ஜே.ஜே. எபினேசர் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
 இதில் மாநகராட்சி நிலை குழு தலைவர் இளைய அருணா, மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் கவுன்சிலர் தேவி கதிரேசன், திமுக பகுதி செயலாளர்கள் லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன், வழக்குரைஞர் மருதுகணேஷ், வெற்றி வீரன் வட்டச் செயலாளர் கதிரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top