தேர்தல் களம் என்பது குழந்தையை வளர்த்து அதற்கு திருமணம் நடத்தி வைப்பது போன்றது. ஒரே நாடு ஒரே தேர்தல் அல்லது எந்த முறையில் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தொண்டர்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என கோபிசெட்டிபாளையத்தில் நடந்த பூத்கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் பவானிசாகர் சட்டபேரவை உறுப்பினர் பண்ணாரி முன்னிலையில் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தல் பூத்கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: .நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி நிர்வாகிகளின் பணி குறித்தும் அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும் வாக்காளர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் கொள்கை குறித்து பேசினார் அப்போது அதிமுக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் தலைமையில் உள்ள இயக்கத்தின் கொள்கை.
ஒரே நாடு ஒரே தேர்தல் செய்திகள் பத்திரிகைகளில் வருகிறது. வந்தால் மகிழ்ச்சி இல்லையெனில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும்.
அதிமுகவை பொறுத்தவரை தியாக வழியில் உள்ள தொண்டர்கள் இருக்கும் வரை தமிழகத்தில் எவராலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. தற்போது அனைத்து விலை வாசிகளும் உயர்ந்துள்ளது.
2 கோடி உறுப்பினர்கள் இருப்பது இந்தியாவிலேயே மாநில கட்சியான அதிமுகவில்தான். ஒரே நாடு ஒரே தேர்தல் அல்லது தேர்தல் எவ்வாறு வந்தாலும் அதனை சந்திக்க தொண்டர்கள் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
தேர்தல் களம் என்பது குழந்தையை வளர்த்து அதற்கு திருமணம் நடத்தி வைப்பது போன்றது என்றார் செங்கோட்டையன்.
இக்கூட்டத்தில் கோபி, நம்பியூர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பூத்கமிட்டி நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலை பள்ளியில் சைக்கிள் வழங்கிய செங்கோட்டையன் எம்எல்ஏ…
அதனை தொடாந்து கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலை பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ வழங்கி பேசியதாவது:
கல்வி என்பது எவ்வளவு முக்கியம் என்று தெரிந்து தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 14 பொருட்களை வழங்கினார், அதில் முக்கியமானது மடிக்கணினி, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் வரை பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலம் மாணவர்களுக்கு வழங்கப்படாத மடிக்கணினிகளை தர வலியுறுத்தி சட்டமன்றத்தில் குரல் எழுப்பினும் அதற்கு விரைந்து மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுப்போம் என 2 முறை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் தேர்தலில் போட்டியிடும் போது, எந்தத் திட்டத்தை அறிவித்தால் மக்களை கவர முடியும் என்று எண்ணிய போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மடிக்கணினி திட்டத்தை அறிவித்ததன் மூலம் 75 சதவிகித மாணவர்களை கவர்ந்தேன். அதன் மூலம் வெற்றி பெற்றேன் எனக்கூறியது அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் பெருமை என்றார் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ.
கூட்டத்தில் யூனியன் சேர்மன் மவுதிஸ்வரன் நகர செயலாளர் பிரினியோ கணேஷ் முன்னாள் எம்பி சத்தியபாமா நகர்மன்ற உறுப்பினர் முத்துரமணன், அருள் ராமச்சந்திரன் தம்பி சுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்