Close
நவம்பர் 22, 2024 4:33 காலை

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மீண்டும் உருவாக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடந்த பிரதிநிதித்துவப் பேரவைக்கூட்டத்தில் பேசிய அரசு ஊழியர் சங்க மாநில செயலளார் அ.குபேரன்

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மீண்டும் உருவாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 16-ஆவது பிரதிநிதித்துவப் பேரவைக்கூட்டம் புதுக்கோட்டை யில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் சே.ஜபருல்லா தலைமை வகித்தார். க.குமரேசன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். விஏகே.மனோக ரன் வரவேற்றார். மாநாட்டைத் தொடங்கி வைத்து மாநில செயலாளர் அ.குபேரன் உரையாற்றினார்.

செயலாளர் இரா.ரெங்கசாமி, பொருளாளர் ரமா.ராமநாதன் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். தோழமைச் சங்க நிர்வாகிகள் மு.முத்தையா, எஸ்.பால்பிரான்சிஸ், அ.மணவாளன், கே.கருப்பையா, ஏ.வள்ளியப்பன், எஸ்.அபுபக்கர்சித்திக் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பேரவையில் கலந்துகொண்டு மாநில செயலாளர் ச.ஹேமலதா சிறப்புரையாற்றினார். ஆ.பழனிச்சாமி நன்றி கூறினார்.

அறந்தாங்கியை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் மாவட்டம் உருக்கப்பட வேண்டும். புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதி மீண்டும் உருவாக்க வேண்டும். ஆவுடையார்கோவிலை சுற்றுலாத்துறை மேம்படுத்த வேண்டும். புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் பெண்களுக்கு நவீன கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் கடல் பசுவைப் பாதுகாக்க வேண்டும்.

புதுக்கோட்டை
பேரவைக்கூட்டத்தில் பங்கேற்றோர்

தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை அழித்திடும் அரசாணை எண்.152, 139ஐ உடனடியாக ரத்துசெய்ய வேண்டும்.

அகவிலைப்படி, சரண்டர் விடுப்பு உள்ளி;டவற்றை மீண்டும் வழங்க வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிக்காலத்தை பணிக்காலமாக மாற்றி வழங்க வேண்டும். காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை 115 -ஐ ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்தம், புற ஆதார முகமை (அவுட் சோர்சிங்) முறைகளை ரத்துசெய்ய வேண்டும். அரசு பயன்படுத்தும் மென்மொருள் திட்டங்களை தனியார்வசம் ஒப்படைப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top