தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் பெருந்துறை ஒன்றியத்திற்குள்பட்ட 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
பெருந்துறை நந்தவனம் மஹாலில் வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.பேபி தலைமையில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செ.சூர்யா முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில், தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி கலந்து கொண்டு, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருள்களை வழங்கி வாழ்த்தினார்.
விழாவில் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.சின்னச்சாமி, தெற்கு மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் விவேக், பள்ளி பாளையம் பேரூராட்சி தலைவர் எஸ்.கோகிலா, பேரூராட்சி செயலாளர்கள் எஸ்.தங்கமுத்து, எஸ்.திருமூர்த்தி , ஓ.சி.வி.ராஜேந்திரன்,
தொகுதி மருத்துவரணி அமைப்பாளர் நவின் , துணை அமைப்பாளர் பாலாஜி, ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் துர்காதேவி,அன்புசெல்வி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சுப்பிரமணி, நித்திக்குமார், கணேசன், லாரன்ஸ்,அந்தோணி ,வட்டார ஒருங்கிணைப்பாளர் சௌந்திரராஜன், வட்டார சமுதாய சுகாதார செவிலியர்கள் சுகுணா, மலர்விழி, சந்திரலேகா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.