Close
செப்டம்பர் 20, 2024 3:45 காலை

புதிய சுற்றுலா கொள்கைக்கு தமிழ் வர்த்தக சங்கம் வரவேற்பு

சென்னை

தமிழ் வர்த்தக சங்கம் வரவேற்பு

தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள புதிய சுற்றுலா கொள்கை யை தமிழ் வர்த்தக சங்கம் வரவேற்றுள்ளது.

இது குறித்து தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் சோழநாச்சி யார் ராஜசேகரன்  வெளியிட்டுள்ள அறிக்கை:

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.20,000 கோடி முதலீடுகளை ஈர்க்கும் இலக்குடன்தமிழ்நாடு புதிய சுற்றுலாக் கொள்கை யை அரசு அறிவித்துள்ளது. இன்று உலக சுற்றுலாதினத்தை கொண்டாடும் வேளையில் இப்புதிய சுற்றுலா கொள்கையை வெளியிட்டிருப்பது சிறப்புக்குரியது.

புதிய சுற்றுலா கொள்கை மூலம் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அந்நியச் செலாவணியும் அதிகரிக்கும்.  ஒற்றைச் சாளர அனுமதி, சுற்றுலாத் துறைக் கான தொழில் நிலை, பன்னிரெண்டு வகையான சுற்றுலா வுக்கு முன்னுரிமையை அறிமுகப்படுத்துதல் மற்றும் பதின்மூன்று வகை சுற்றுலாத் திட்டங்களில் தனியார் முதலீடுகளை ஈர்ப்பது, திருநங்கைகள், மாற்றுத் திறனாளி களுக்கான மூலதன உதவிகளை அறிமுகப் படுத்துதல். உலகளாவிய பொழுதுபோக்குப் பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் மாநிலத்தில் சுற்றுலாத் துறையை வளர்ப்பதில் பெருமளவு பங்கு வகிக்கும்.

அகில இந்திய சுற்றுலா பயணிகளையும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் வகையி்ல் புதிய சுற்றுலா கொள்கை வழிவகுக்கிறது.

நீண்ட கடற்கரை, வரலாறு, ஆன்மிகம், பாரம்பரியம், மலை வாசஸ்தலங்கள்,  சொகுசுக் கப்பல் சுற்றுலா போன்ற பல வகையான சுற்றுலா வாய்ப்பு களை இந்த புதிய சுற்றுலாக் கொள்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top