Close
ஜூலை 4, 2024 5:45 மணி

வள்ளலார் 201 வது அவதார திருநாள் விழா

புதுக்கோட்டை

பல்வேறு போட்டிகளில் வெற்றி சாதனை வள்ளலார் மாணவர்களுக்கு இல்ல தலைவர் டாக்டர் ராமதாஸ் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்

புதுக்கோட்டையில் திருவருள் பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் 201 வது அவதார திருநாள் விழா கொண்டாடப் பட்டது.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று உயிர்கள் மீது கருணை மழை பொழிந்தபுதுக்கோட்டையில் வள்ளல் பெருமானின் 201 ஆம் ஆண்டு வருவிக்க உற்ற திருநாள் விழா புதுக்கோட்டை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பாக  புதுகை கௌரி நிவாஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சன்மார்க்க சங்க தலைவர் சி காத்தமுத்துசாமி தலைமை வகித்தார்.  செயலாளர் முத்தையா,   வள்ளலார் மாணவர் இல்ல தலைவர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். பொருளாளர் முனியமுத்து அனைவரையும் வரவேற்றார்.            நிகழ்வில்   ஞான தீபம் ஏற்றப்பட்டது.  சன்மார்க்க அன்பர்களால் அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதப்பட்டது. உலகை கட்டி ஆளும் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் திருவருள் பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் 201 வது அவதார திருநாள் விழா கொண்டாடப் பட்டது.

நிகழ்ச்சியில் பல்வேறு  போட்டிகளில்  வெற்றி சாதனை வள்ளலார் மாணவர்களுக்கு  இல்ல தலைவர் டாக்டர் ராமதாஸ்  மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி  பேசுகையில், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று உயிர்கள் மீது கருணை மழை பொழிந்த வள்ளல் பெருமானின்   சன்மார்க்க நெறிகளை ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரியிலும் கொண்டு சேர்ப்பது நமது கடமை என்று குறிப்பிட்டார்.

பின்னர் சென்னை உயிர் உறவு சங்கரய்யா முருகேசன் சிறப்புரை ஆற்றினார்.   வள்ளலார் மாணவர் இல்ல மாணவர்களின் யோகா நிகழ்ச்சி , மகளிர் அரங்கம்,  சன்மார்க்க சான்றோர் பெருமக்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

முன்னதாக, வள்ளல் பெருமகனாரின் திரு உருவப்பட ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜோதி வழிபாடு நடைபெற்றது.  சன்மார்க்க பொறுப்பாளர்கள், புதுக்கோட்டை மாவட்ட அனைத்து சன்மார்க்க அன்பர்கள் பொதுமக்கள், பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.  முடிவில்  நமச்சிவாயம் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top