Close
ஜூலை 4, 2024 4:55 மணி

ஆலய வளாகத்தில் தூய்மை பணி மேற்கொண்ட அரசு ஐடிஐ ரோட்ராக்ட் மாணவர்கள்

புதுக்கோட்டை

கோயில் வளாகத்தில் தூய்மைப்பணி மேற்கொண்ட ஐடிஐ ரோட்ராக்ட் மாணவர்கள்

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய ரோட்ராக்ட் சங்கம் இணைந்து  சாந்த நாதர் கோயில் அருகில்  உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் வளாக தூய்மை பணி மேற்கொண்ட னர்.

சங்கத் தலைவர் அசோகன் தலைமையில் நடைபெற்றது முன்னதாக  புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய ரோட்ராக்ட் சங்கத் தலைவர் மரிய ஜெரால்டு வரவேற்றார்.

மேனாள் நகர் மன்றத் துணைத் தலைவரும் மற்றும் நகர மன்ற உறுப்பினருமான சேட் என்ற அப்துல் ரகுமான், சாந்தநாதர் ஆலய மகா பிரதோஷ வழிபாட்டு மன்ற அமைப்பாளர் மல்லிகா வெங்கட்ராமன், துணை ஆளுநர் ஜெயக்குமார், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூய்மை பணியை புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர் மன்ற துணைத் தலைவர் லியாகத்அலி  ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

 நிகழ்ச்சியில் செயலாளர் முத்தன் அரசகுமார், பொருளாளர் சங்கர், மேனாள் தலைவர் சிவக்குமார், ஓம்ராஜ், இளங்கோ வன், பரமசிவம், யோகேஸ்வரன், சேகர். செல்வகுமார், நாகராஜன், சேது கார்த்திகேயன், ஜெகநாதன். பால்ராஜ், கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி கண.மோகன் ராஜா செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top