சாதியை சொல்லி திட்டியதால் தற்கொலை செய்த வாலிபர் குடும்பத்துக்கு நிவாரண நிதியை தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், கொப்பம்பட்டி கிராமம், பெரியார் நகரைச் சேர்ந்த வீரமுத்து என்பவரின் மகன் விஷ்ணுகுமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து உள்ளனர். வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொப்பம்பட்டி கிராமத்தில் தேசிய தாழ்த்தப் பட்டோருக்கான ஆணைய இயக்குநர் ரவிவர்மன் விசாரணை மேற்கொண்டு, வன்கொடுமை சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டு இறந்துவிட்ட விஷ்ணுகுமாரின், தந்தை வீரமுத்துவிடம், உதவித் தொகை ரூ. 6 லட்சம் ரூபாய் (50 சதவீதம்) காசோலை யினை, தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய இயக்குநர் ரவிவர்மன் வழங்கினார்.
முன்னதாக இந்நிகழ்வு குறித்து, அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் துறை ரீதியான நடவடிக்கைகள் குறித்து, புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில், மாவட்ட கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யாவுடன், தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணைய இயக்குநர் ரவிவர்மன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் க.ஸ்ரீதர், இலுப்பூர் வருவாய்கோட்டாட்சியார் தெய்வநாயகி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்எம்.மஞ்சுளா, குளத்தூர் வட்டாட்சியர் காமராஜ், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.