Close
நவம்பர் 22, 2024 1:44 காலை

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் பயிற்சி: ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை

ஆட்சியர் மெர்சி ரம்யா

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் GS EMPOWER SKILL நிறுவனத்தின் மூலமாக பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தெரிந்தவர்களுக்கு வீட்டு வேலை செய்பவர்(பொது), 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநராகவும் மற்றும் உதவி குழாய் பழுது பார்ப்பவர் (பொது), நான்கு சக்கர வாகன சேவை உதவியாளராகவும், 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வார்டு பாய் ஆண் மற்றும் பெண் உதவியாளராகவும், 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வாடிக்கையாளர் பாரமரிப்பு நிர்வாகி அழைப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

18 முதல் 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 14 நாட்கள் ஆகும். மேலும், சென்னை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்படும். இந்நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் செய்து தரப்படும்.

மேலும், இப்பயிற்சியினை பெற்றவர்கள் (National Hospital, Ezhil Hospital, Facility India – Man Power company etc., TVS co Good food & laugh PEGATRAN, Horizon Packing P.Ltd Tindivanam, Suja shoes Industry – Tindivanam, SIPCOT Tindivanam, RMR Hospital Thiruvannamalai, SPMS -Thiruvannamalai, Don Bosco Thiruvannamalai) போன்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.

இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் www.tahdco.com மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ வழங்கும்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, புதுக்கோட்டை ( 04322-221487 -தொலைபேசி) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற  தகவலை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top