Close
ஜூலை 4, 2024 5:00 மணி

தேசிய சட்ட சேவைகள் தினம்: புதுக்கோட்டையில் அனுசரிப்பு

புதுக்கோட்டை

தேசிய சட்ட சேவை தினம் ஆண்டு தோறும் நவம்பர் 9 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும். புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி கே.பூரண ஜெய ஆனந்த் வழிகாட்டுதலின் படியும்,  தேசிய சட்ட சேவைகள் தினம் புதுக்கோட்டை மாவட்ட சட்ட உதவி மைய அலுவலகத்தில்  கடைப்பிடிக்கப்பட்டது.

இதில் புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத் தின் தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி .பூரண ஜெய ஆனந்த், அவர்கள் தலைமை  வகித்து  பேசியதாவது:  நம் நாட்டிலுள்ள சட்டங்களுக்கெல்லாம் தலையாய சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம்.

இதில் தான் அடிப்படை உரிமைகள் பற்றியும், அடிப்படை கடமைகள் பற்றியும் கூறுகிறது. பொதுமக்கள் பெரும்பாலும் தங்களது அடிப்படை உரிமைகளைப்பற்றித்தான் பேசுகிறார்கள், போராடுகிறார்கள் பொதுநலனையும், அடிப்படை கடமையையும் மறந்து விடுகிறார்கள்.

அடிப்படை உரிமைகளை வழங்கிய அதே அரசியலமைப்பு சட்டம் தான் அடிப்படை கடமைகளையும் ஆற்ற சொல்லி பணித்திருக்கிறது. கல்வி அறிவு மேம்பட மேம்பட படித்தவர் கள் தங்களது அடிப்படை உரிமைகளை தூக்கி பிடித்து போராடுகிறார்கள்.

அதன் மூலம் நிறைய வழக்குகள் வருகிறது. ஒரு கட்டத்திற் குள் மேல் இதை அடிப்படையாக கொண்டு சுயநலமாக செயல்படுகிறார்கள். அடிப்படை கடமைகள் என்பது இந்திய குடிமக்கள் அரசுக்கும். சமுதாயத்திற்கும் ஆற்ற வேண்டியது. இந்நாட்டின் குடிமக்கள் தங்களது அடிப்படை கடமைகளை ஆற்ற மறந்து விடுவதால் பொதுநலமும், சமுதாய நலமும் பாதிக்கப்படுகிறது. எனவே ஒவ்வொருவரும் சுயநலத்தை தவிர்த்து சமுதாய கடமை.ஆற்ற வேண்டும்.

சட்ட உதவி என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமை ஆகும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். எனவே சமநீதியை குடிமக்கள் அனைவரும் பெற உரிமை உள்ளது. அதனை மீட்பதற்கும், கோரிப்பெறுவதற்கும் சட்டப்பணிகள் ஆணையம் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. பொதுமக்கள் இந்த சட்ட சேவைகளை உரிய விதத்தில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.கே.  பாபுலால், (அத்தியாவசிய பண்டங்கள். போதைபொருள் மற்றும் மதி மயக்கநிலை வஸ்துகள் சட்ட சிறப்பு நீதிமன்றம்).

தலைமை குற்றவியல் நீதிபதி (பொறுப்பு) எஸ். சசிகுமார். புதுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.1  எம். ஜெயந்தி, குற்ற வழக்கு எதிர்வாத சட்ட உதவி அமைப்பின் வழக்கறிஞர்கள் கே.மதியழகன், டி அங்கவி, வி. மணிகண்டன் மற்றும் ஆர். யசோதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சமூக ஆர்வலர் எம். ஸ்டெல்லா புஷ்பராணி  வரவேற்புரை ஆற்றினார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும் கூடுதல் மாவட்ட நீதிபதியுமான ஜி.எம். வசந்தி அவர்கள் சட்டப்பணிகள் தினத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

 இந்தக் கருத்தரங்கில் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி. புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவின் காவல் உதவி ஆய்வாளர்  வைரம், புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் கே. சதாசிவம்.  திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கீதா (பெண்கள் காவல் உதவி மையம்),  புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தின் நிரவாக அதிகாரி நிர்மலா ராணி,

புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் ஆற்றுப்படுத்துனர் இரமாபிரியா,  புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி பவானி, தர்மா, ரூபம், உதவி ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள்,  இளஞ்சிறார் நீதிக்குழும உறுப்பி னர்கள், சிறுவா கூர்நோக்கு இல்ல நிர்வாகிகள். அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பக கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வினை புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர்/மூத்த சிவில் இ. ராஜேந்திர கண்ணன்  நெறிப்படுத்தி வழங்கினார். குற்றவழக்கு எதிர்வாத சட்ட உதவி அமைப்பின் வழக்கறிஞர் கே. மதியழகன் நன்றி கூறினார்.

தேசிய சட்ட சேவை தினம் ஆண்டுதோறும் நவம்பர் 9 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது 9 நவம்பர் 1995 அன்று நடைமுறைக்கு வந்தது. சட்ட சேவைகள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு விதிகள் மற்றும் வழக்கு தொடுப்பவர்களின் உரிமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

 சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட சேவைகளை வழங்கவும், சச்சரவுகளை சுமுகமாகத் தீர்ப்பதற்காக லோக் அதாலத்களை நடத்தவும், 1987 சட்ட சேவைகள் அதிகாரச் சட்டம், NALSA உருவாக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top