Close
ஜூலை 7, 2024 8:38 காலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் (23.11.2023) நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் திட்டம், பாரத பிரதமரின் கிஸான் சம்மான் நிதித் திட்டம், மண்வள அட்டை இயக்கம், பிரதான் மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்.

பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம் – தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை, ஊரக மின் மயமாக்கல் திட்டம்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம், தேசிய சுகாதார இயக்கம், பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் மிசன், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், அரசு கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை கண்காணித்து சேதமடைந்துள்ள கட்டிடங்களை பாதுகாப்பாக இடித்து அப்புறப்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேற்கண்ட வளர்ச்சித் திட்டங்களை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர்  ஐ.சா.மெர்சி ரம்யா  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.நா.கவிதப்பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top