Close
ஜூலை 2, 2024 2:18 மணி

குறைகேட்பு முகாம்…ஆட்சியரிடம் 355 பேர் மனு அளிப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற முகாமில் நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர்  ஐ.சா.மெர்சி ரம்யா  தலைமையில்  (27.11.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில்  நடத்தப்பட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 355 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அரிமளம் வட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அவரது வாரிசுதாரரும் மனைவியுமான  பொன்னழகு என்பவரிடம் ரூ.1 இலட்சம் நிதியுதவித் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யது முகம்மது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top