Close
ஜூன் 30, 2024 5:10 மணி

மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: ஆட்சியர் தொடக்கம்

புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை புதுக்கோட்டை.யில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத் திறனாளி கள் நலத்துறையின் சார்பில்,  தமிழ்நாடு ‘உரிமைகள்” திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சியர்  ஐ.சா.மெர்சி ரம்யா  (30.11.2023) தொடக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி  தமிழ்நாடு ‘உரிமைகள்” திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூக தரவுகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை துவக்கி வைத்து, பின்னர் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் விழிப்புணர்வு செயலி வெளியிடப்பட்டது.

மேலும், மாற்றத்திறனாளிகள் முழுமையாக கணக்கெடுப்பில் பங்கேற்க செய்யும் பணி குறித்த விழிப்புணர்வு விளம்பர பிரசுரங்களை மாற்றுத்திறனாளி பிரதிநிதிகளுக்கு வழங்கியும், பிரசார வாகனத்தில் கையொப்பமிட்டும் தொடக்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு ‘உரிமைகள்”; திட்டத்தின் ஒரு அங்கமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூக தரவுகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக செயல்படுத்தப் படவுள்ள தமிழ்நாடு ‘உரிமைகள்”; திட்டத்தின் கீழ் தமிழகத் தின் கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒருங்கிணைந்த சேவைகள் வழங்கி அவர்களுக்கான உள்ளடக்கிய வாய்ப்புகளை மேம்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் ஒரு அங்கமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்தான சமூக தரவுகள் கணக்கெடுப்பு குறித்து அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தெரிந்து கொள்ளும் வகையில் மாற்றுத்திறனாளிகள் அனைவரிடமும் சமூக தரவுகள் பதிவில் பங்கேற்கும் ஆர்வத்தை உருவாக்கிட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுடன் தொடர்பில் உள்ள நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மூலமாக சமூக தரவுகள் பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், கணக்கெடுப்பு தரவுகள் பதிவு செய்வதற்கான விழிப்புணர்வு செயலியை வெளியிட்டும் மற்றும் பிரசார வாகனத்தை கையெழுத் திட்டும் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு கணக்கெடுப்பு 30.11.2023 முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் பகுதிகளில் அனைத்து வார்டுகள் மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கணக்கெடுப்பில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கக்களப்பணியாளர்களும் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர் களும் என 557 பணி யாளர்களுக்கு சமூக தரவுகள் பதிவு குறித்த கணக்கெடுப்பு தொடர்பான செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டு, கணக்கெடுப்பு பணிகளை மாற்றுத் திறனாளிகளின் வீட்டிற்கு நேரடியாக வந்து மேற்கொள்ள உள்ளனர்.

இக்கணக்கெடுப்பின் நோக்கமானது மாற்றுத் திறனாளி களின் மேம்பாட்டிற்கும், எதிர்காலத்தில் அவர்களின் முன்னேற்றத்திற்கும், மறுவாழ்வுப் பணிகளுக்கும் உறுதுணை யாக இருக்கும்.

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்கள் தகவல்களை இக்கணக் கெடுப்பில் முழுமையாக தயக்கமின்றி கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டும். மேலும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் பணியில் பங்குகொள்வதை நினைத்து பெருமை கொள்ள வேண்டும்.

களப்பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பணி யினை மிகவும் சரியாக செய்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் கணக்கெடுப்பை முழுவதும் வெற்றியடைய செய்திட வேண்டும் என்றார் ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர்  ரேவதி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, உரிமைகள் நலத்திட்ட மாவட்ட அலுவலர் எஸ்.அழகுமன்னன், அரசு செவித்திறன் குறைபாடு டையோருக்கான சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top