Close
ஜூன் 28, 2024 7:00 காலை

ரோட்டரி சார்பில் மது விழிப்புணர்வு கையேடு வழங்கல்..

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மது ஒழிப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கிய ரோட்டரி நிர்வாகளிகள்

புதுக்கோட்டை மது விழிப்புணர்வு குழு, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், மற்றும் புத்தாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் இணைந்து மது விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் பி.அசோகன் தலைமையில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு அலுவலர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் மது விழிப்புணர்வு குழு ஒருங்கிணைப்பாளர் மாருதி கண.மோகன்ராஜா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் 34 -ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜெ.ராஜாமுகமது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மது விழிப்புணர்வு கையேட்டினை மாணவர்களுக்கு வழங்கி தந்தார்.

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.பார்த்திபன் முன்னிலை வகித்தார் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க பொருளாளர் ஆர்.சங்கர், வருங்கால தலைவர் வி.ஆர்.எம். தங்கராஜா, பி.குணசேகரன், சண்முகராஜா மனோகரன் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை  கராத்தே மாஸ்டர் சேது கார்த்திகேயன் செய்திருந்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top