Close
ஜூலை 7, 2024 10:11 காலை

புதுக்கோட்டை மாவட்ட  அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட  அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்  இன்று நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில்  (14.12.2023) நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு அதன் காலமுறைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 -வயதிற் குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளை தடுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, குழந்தைகள் தொடர்புடைய துறைத் தலைவர்களை ஒருங்கிணைத்;து மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் காலமுறைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குழந்தைகள் தொடர்புடைய துறைகளான நீதித்துறை, காவல்துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை, தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், தன்னார்வ தொண்டு நிறுவனம், சைல்டுலைன், குழந்தைகள் இல்லம், சமூகப்பாதுகாப்புத்துறை சார்ந்த நன்னடத்தை அலுவலர், இளைஞர் நீதி குழுமம், குழந்தைகள் நலக்குழு ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்குழுக் கூட்டத்தில் குழந்தைகள் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில் குழந்தைகள் தொடர் பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அனைத்து துறைத்தலைவர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .

மேலும் கிராம அளவிலான, ஒன்றிய அளவிலான, நகரப் பஞ்சாயத்து அளவிலான மற்றும் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடையே குழந்தைகள் உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி வாகனங்கள், அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் ஆகியவற்றில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டவும் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் தகவல் பலகைகளில் 1098 எண் குறித்துதொடர்புடைய அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர் பாக அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், குடும்பநல நீதிமன்ற நீதிபதி (ம) மகிளா நீதிமன்ற நீதிபதி (பொ)  ஜெயந்தி , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்  வசந்தகுமார், மாவட்ட சமூகநல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர்  புவனேஸ்வரி, குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top