Close
ஜூலை 4, 2024 5:24 மணி

  புதுக்கோட்டை   வைரம்ஸ் பள்ளியில் இன்னர்வீல் சங்க நலத்திட்டங்கள் வழங்கல்

புதுக்கோட்டை

நலத்திட்ட உதவிகள்  வழங்கிய இன்னர் வீல் சேர்மன் அனிதா நாகராஜன். உடன் தலைவர்  சாந்திசுப்பிரமணியன், செயலாளர் நித்யாலெட்சுமிசரவணன்  மற்றும் பலர் உள்ளனர்

புதுக்கோட்டை   வைரம்ஸ் பள்ளியில் இன்னர்வீல் சங்க நலத்திட்டங்கள் வழங்கும் விழா   நடைபெற்றது.                                                                                                                                                              புதுக்கோட்டை   வைரம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்னர்வீல் சங்கம் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது,

தலைவர்  சாந்திசுப்பிரமணியன் தலைமை  வகித்தார்.   செயலாளர் நித்யாலெட்சுமிசரவணன்  வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக இன்னர்வீல்   சங்க   சேர்மன்   அனிதா நாகராஜன்  வருகை தந்து மகளிருக்கு தையல் இயந்திரம் ஏழை மாணவிக்கு சைக்கிள்  மற்றும் ராஜகோபாலபுரம் நகராட்சி பள்ளிக்கு ஸ்டூல், டெஸ்க்   புதுக்கோட்டை பார்வையற்றோர் பள்ளி  மாணவ மாணவிகளுக்கு சீருடைகள் பள்ளிக்கு கீ போர்டு வழங்கி இன்னர் வீல் சங்க செயல்பாடுகளைப் பற்றி  பேசியதாவது:

புதுக்கோட்டையில் இன்னார்வில் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  நலத்திட்டங்கள் வழங்குவதில்  முன்னுரிமையும் பெற்று இருக்கிறீர்கள் என்றார்.

நிகழ்வில் இன்னர் வீல் கிளப் சங்கத்தின் 2023 -ஆம் ஆண்டின் சேவைத் திட்டத்தின் மாதாந்திர இதழினை சேர்மன் வெளியிட்டார். இதில் புதிய உறுப்பினர்கள் இணைந்து கொண்டனர்.

முன்னாள் தலைவர்கள் செயலாளர் நிர்வாகிகள் உறுப்பினர் கள் மகாராணி ரோட்டரி சங்க தலைவர் கருணைசெல்வி மற்றும் நிர்வாகிகள்,   வைரம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் நிகழ்வை முன்னாள் தலைவர் வள்ளியம்மை தொகுத்து வழங்கினார். பத்மப்ரியா நன்றி கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top