சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க முடிவு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை கீழ இரண்டாம் விதி சங்கீதாஸ் ஹோட்டலில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் சிறப்புக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் மாருதி கண.மோகன் ராஜா தலைமை வகித்து வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தின் நோக்கம் குறித்து செயலாளர் ஏஎம்எஸ். இப்ராஹிம் பாபு விளக்க உரையாற்றினார். மேலும் பெருகிவரும் சாலை விபத்துகளை கருத்தில் கொண்டு பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சங்கத் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வது.
பள்ளி கல்லூரி மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சங்க ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் .சாலை பாதுகாப்பு வார விழாவில் சங்கத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்துவது மற்றும் வார விழாவை சிறப்பாக கொண்டாடுவது.
சங்க உறுப்பினர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பெயர் குறித்த சட்டை வழங்குவது மற்றும் அடையாள அட்டை வழங்குவது, நிகழ்ச்சிகளில் ரோட்டரி சங்கத்தினை இணைத்துக் கொள்வது என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் துணைத் தலைவர் ஆர்.ஆரோக்கியசாமி, இணைச் செயலாளர்கள் ஆர்.சிவக்குமார், மாஸ்டர் சேது கார்த்திகே யன், அரசு தொடர்பு ஜெ.ராஜா முகமது, திட்டத் தலைவர் கேஎல்கேஎஸ்..ராஜா முஹம்மது,நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் புதுகை புதல்வன், தகவல் தொடர்பு வாழ்த்து குழு பி.கே.கண்ணன்,
உறுப்பினர் வளர்ச்சி க.முத்துராமலிங்கம், செயற்குழு உறுப்பினர் விஆர்எம். தங்கராஜ் மற்றும் .சங்கர், ஆரவாமுதன், நாகரத்தினம், ஜான்சி ராணி, ரமேஷ், பத்திரிக்கை தொடர்பு மு.கண்ணன், சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பொருளாளர் சி. பிரசாத் நன்றி கூறினார்