Close
நவம்பர் 13, 2024 1:08 காலை

இந்திய விரைவு ரயில்களில் நவீன பெட்டிகள் இணைப்பு

இந்தியாவில் இயக்கப்படும் நீண்டதுார ரயில்களில் எல்.எச்.பி., என்ற நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன.

ஜொ்மன் தொழில் நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள எல்.எச்.பி. என்னும் நவீன பெட்டிகள் அனைத்து விரைவு ரயில்களில் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பெட்டிகள் அதிர்வுகள் இல்லாமல் பாதுகாப்பாகவும் வேகமாகவும் செல்ல வசதியாக இருக்கிறது.

எல்.எச்.பி வசதிகள்: ஜெர்மனி தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்படும் எல்.எச்.பி., பெட்டிகளின் எடை 52 டன்னிற்கும் குறைவானது என்பதால் மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்க முடியும். எளிதில் தீப்பிடிக்காத வகையிலும், பாதுகாப்பான பயணம் தரும் வகையிலும், வடிவமைக்கப்பட்டு உள்ளன.

விபத்துகளின்போது ஒரு ரயில்பெட்டி மற்ற ரயில்பெட்டியின் மீது மோதி பெரும் சேதம் விளைவிப்பதைத் தவிர்க்கும் வகையில் சென்டர் பப்பர் கப்ளர் இணைக்கப்பட்டுள்ளது. ரயில்களின் உள்ளே சப்தம் கேட்பதைத் தவிர்க்கும் வகையில் இன்சுலேஷன் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குறைந்த சத்தம் எழுப்பக்கூடியது என்பதால் பயணிகள் அமைதியான சூழலில் பயணிக்க முடியும்.

நீல நிறத்தில் தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகளை விட, இந்த பெட்டிகள் நீடித்த உழைக்க கூடியதாகும். கம்ப்யூட்டர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. நவீன வாஷ்பே‌ஷன்கள், பயோ டாய்லெட்கள் உள்ளன. படுக்கை வசதிகொண்ட பெட்டிகளில் கூடுதலாக 8 பெர்த் என மொத்தம் 80 படுக்கைகள் இடம்பெற்று உள்ளது.

பயணிகள் வசதிக்காக பெரிய ஜன்னல்கள், கால் வழுக்காத பிவிசி தரைவிரிப்புகள், ரயில்பெட்டிகள் இடையே தானியங்கிக் கதவுகள் போன்ற மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top