Close
ஏப்ரல் 2, 2025 2:55 காலை

அணுகுண்டு இல்லாததால் வந்த வினை?

இன்று உக்ரைன் என்ற நாட்டை என்ன தான் நேட்டோ நாடுகள் ஆயுதங்களை அள்ளி அள்ளி கொடுத்தாலும், ரஷ்யா அடித்து துவைக்கிறது. அதனுடைய 28% நிலத்தை தன் வசப்படுத்தி, அதன் முக்கிய எனர்ஜி சோர்ஸ்களை (Grida, Producing source) எல்லாவற்றையும் ரஷ்யா தாக்கி அழித்ததால், மக்கள் உறைபனியில் குளிரில் செத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

3 லட்சம் பேர் கொண்ட உக்ரைன் ராணுவத்தில் 1 லட்சம் இறந்து விட்டார்கள். அல்லது ஊனமாகி விட்டார்கள். இன்னொரு பகுதி ராணுவத்தை விட்டு ஓடிவிட்டார்கள்.  இதுவெல்லாம் எதனால்? ஏன்?

1991ல் ரஷ்யா உடைந்த போது சோவியத் யூனியன் தான் அதிக அணு ஆயுதத்தை வைத்திருந்தது. அது உடைந்த பின்னரும் ரஷ்யா தான் உலகில் அதிகமான அணு ஆயுதத்தை வைத்திருந்த நாடு. அதற்கு அடுத்ததாக அதிக அணு ஆயுதம் வைத்திருந்த நாடு அமெரிக்காவல்ல, உக்ரைன் தான். அந்த உக்ரைன் அமைதியை விரும்பும் நாடு. அதற்கு யாரும் எதிரியில்ல என்பதால் அதன் ஆயுதங்களையும், ராணுவத்தையும் வெகுவாக குறைத்தது.

அப்போது அமெரிக்கா, ரஷ்யா இரண்டும் உங்களுக்கு அணு ஆயுதம் தேவையில்லை. உங்களுக்கு எந்த ஆபத்து வந்தாலும் நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம் என்று பேசி அது வைத்திருந்த அனைத்து அணு ஆயுதத்தையும் மொத்தமாக அழித்து விட்டது. இன்று அந்த நாட்டை நாசப்படுத்தியது வேறு யாருமல்ல, அந்த நாட்டை யார் பாதுகாப்போம் என்று சொல்லி ஏமாற்றினார்களோ அதே அமெரிக்காவும், ரஷ்யாவும் தான் இன்று உக்ரைனை அழித்து விட்டனர்.

ரஷ்யா சரி, அதெப்படி அமெரிக்கா? ரஷ்யா உன்னை தாக்கி விடும், ஆக்கிரமித்து விடும், அழித்து விடும் என்று பயமுறுத்தி அதன் மீது சந்தேகத்தை விதைத்தது. அதை மீடியா, உளவு செய்தி என்று திரித்து சொல்லப்பட்ட செய்தியை மக்களிடம் திணித்தது மூலம் அந்த நாட்டு மக்களுக்கு ஒரு பயம் கலந்த சந்தேகத்ததை விதைத்து நாட்டையே பயமுறுத்தியது. அதன் பின் ஒரு சுய சிந்தனையற்ற ஒருவரை ஆட்சியில் அமர்த்தியது.

அப்புறம் உன்னை பாதுகாத்துக்கொள்ள நேட்டோவில் சேர்ந்தால் மட்டுமே உன்னால் தனி நாடாக இருக்க முடியும் என்று சொல்லி அதை நேட்டோவில் சேர வற்புறுத்தியது. அதனால் ரஷ்யா தன் பாதுகாப்புக்கு ஆபத்து என்று கோபமடைந்து, உக்ரைனை தாக்கியது.

உக்ரைனிடம் அந்த அணு ஆயுதங்கள் இருந்திருந்தால் ரஷ்யா தாக்கியிருக்குமா? அந்த அணு ஆயுதம் இருந்திருந்தால் ரஷ்யா உன்னை தாக்கும் என்று அமெரிக்கா பயமுறுத்திய போது பயந்திருக்குமா?

அதாவது நம் மீது நமக்கு நம்பிக்கை இல்லாத போது நம்மை வர்றவன் போறவன் எல்லாம் பயமுறுத்துவான். அப்படித்தான் அமெரிக்கா பல நாடுகளை ரஷ்ய பூச்சாண்டி காட்டி பயமுறித்தி நேட்டோவில் இணைத்தது.

எனவே ஒரு நாட்டிற்கு அணு குண்டு என்பது எதிரியை தாக்கி அழிப்பதை விட, அவனிடம் ஆபத்தான ஆயுதம் இருக்கிறது என்று எதிரியை யோசிக்க வைத்து, அந்த நாட்டை பாதுகாக்க அவசியம் தேவை. அதனால் தான் இந்தியா அணுகுண்டு  சோதனை செய்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top