பத்தாண்டுகளுக்கு முன்பு சுமார் ₹2,000 கோடியாக இருந்த நமது பாதுகாப்பு ஏற்றுமதி, தற்போது 2024லில் ₹21,000 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. 2029க்குள் ₹50,000 கோடி ஏற்றுமதி இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி, தாராளமயமாக்கப்பட்ட ஏற்றுமதி விதிமுறைகள் மற்றும் முழு அரசாங்க அணுகுமுறை ஆகியவற்றில் அரசாங்கத்தின் கவனம் போன்றவைகள் தான் இந்த வளர்ச்சிக்குக் காரணம்.
எல்&டி, கோத்ரெஜ், அதானி போன்ற பெரிய நிறுவனங்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும் ஸ்டார்ட்அப்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒன்றிணைத்து, ராணுவத் தளவாடங்களை உருவாக்க இந்தியா தனது பாதுகாப்புத் தயாரிப்பு வரம்பை விரிவுபடுத்துகிறது. பிரம்மோஸ் ஏவுகணைகள், இலகுரக போர் விமானம் (எல்சிஏ), ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்கள், பீரங்கித் துப்பாக்கிகள், டாங்கிகள், ரேடார்கள் மற்றும் மின்னணு போர் முறைமைகள் உள்ளிட்ட ராணுவ வன்பொருள்களின் விரிவான போர்ட்ஃபோலியோவை நாடு ஏற்றுமதிக்கு பட்டியலிட்டுள்ளது.
தற்காப்பு மற்றும் விண்வெளி உற்பத்தியில் தனியார் தொழில்துறையின் வெற்றிகரமான நுழைவு மற்றும் அளவை அதிகரிப்பது, ஊழல் இல்லாத அரசாங்கத்தைக் கொண்டிருப்பதன் மூலம் சாத்தியமானது. ஆத்மநிர்பார்பாரத் நமது பெருமையாக உருவெடுத்துள்ளது. அடுத்து வரும் சில ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி பெரிய அளவில் வருவாய் கொடுக்கும் என்ற நம்பிக்கையும் கிடைத்துள்ளது.