Close
செப்டம்பர் 20, 2024 4:00 காலை

புதுக்கோட்டை ரயில் நிலைத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

புதுக்கோட்டை

திருச்சி யிலிருந்து புதுக்கோட்டை காரைக்குடி மின்பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது

மின்மயமாக்கப்பட்டுள்ள திருச்சி-புதுக்கோட்டை-காரைக்குடி இடையே மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் இன்று (17/02/22) நடைபெற்றது.

திருச்சி காரைக்குடி வழித்தடத்தில் 89 கிலோ மீட்டருக்கு மின்சார ரயில் பாதை மாற்றும் பணி 90 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த ஒரு வருட காலமாக பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த வழித்தடத்தில் மின் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சியிலிருந்து காலையில் புறப்பட்ட அவர் குமாரமங்கலம் கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்தார்.

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் பல்வேறு பணிகள் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டார் அவருடன் வந்த ரயில்வே அதிகாரிகள் மின் பாதை அமைக்க பணி எவ்வாறு நடைபெற்றுள்ளது குறித்து விளக்கமளித்தனர்.

பின்னர், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திருச்சி காரைக்குடி இடையே மின் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது இதனை தற்போது ஆய்வு மேற்கொண்டுள்ளேன். இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் எந்தவிதமான குறைகளும் கண்டறியப்படவில்லை பணிகள் நன்றாக நடந்துள்ளது.இன்று மாலை சோதனை ஓட்டம் என்பது நடைபெறும் அதன் பிறகு அறிக்கை சமர்ப்பிக்கபடும்அந்த பின்னர் திருச்சி காரைக்குடி வரை அமைக்கப்பட்டுள்ள மின் பாதையில் ரயில்கள் இயங்க தொடங்கும்.

தெற்கு ரயில்வே எந்தெந்த பகுதிகளில் மின் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறதோ அந்த பணிகள் முடிவடைந்த பிறகு என்னிடம் கூறுவார்கள்  பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பிப்பேன். அதன்பிறகு பாதுகாப்பு தன்மை உறுதிப்படுத்தப்பட்ட பிறகு மின் பாதையில் ரயில்கள் இயக்கப்படும் என்றார்.

இந்த ஆய்வில் முதன்மை மின்சார பொறியாளர் ராஜமுருகன் மின்மயமாக்கல் திட்ட இயக்குனர் டி.கே.,  மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த் உள்ளிட்ட  அதிகாரிகள் கலந்து கொண்டனர்

புதுக்கோட்டை ரயில் நிலையம் நிலையத்தில் ஆய்வு நடைபெற்றதையடுத்து, புதுக்கோட்டையிலிருந்து CRS Inspection Special ரயில் மதியம் 01:20 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு மதியம் 03:20 மணிக்கு சேர்ந்தது.

மின்சார ரயில் என்ஜின் இணைப்பு:

காரைக்குடியில் மின்சார ரயில் என்ஜின்(AC Loco) பொறுத்தப்பட்டு, காரைக்குடியிலிருந்து இந்த CRS Inspection Special மதியம் 03:35 மணிக்கு புறப்பட்டு  புதுக்கோட்டை வழியாக திருச்சி நோக்கி அதிவேக சோதனைஓட்டம் நடைபெறவுள்ளது. திருச்சிக்கு மாலை 04:40 மணிக்கு சென்றவுடன் CRS Inspection நிறைவுபெறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top