Close
நவம்பர் 21, 2024 8:13 மணி

புதுக்கோட்டை ஆத்மா யோகா மையம் யோகாவில் உலக சாதனை…!

புதுக்கோட்டை

உலகசாதனை படைத்த புதுக்கோட்டை ஆத்மா யோகா மைய மாணவர்கள்

புதுக்கோட்டை ஆத்மா யோகா மையம் யோகாவில் உலக சாதனை படைத்தது.

புதுக்கோட்டை ஆத்மா யோகா மையம் சார்பாக புத்தாண்டில் புதிய உலக சாதனை படைப்போம் என்ற  கருத்தை முன்னெ டுத்து, சென்னையில் உள்ள யுனிவர்செல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை நிறுவனத்துடன் இணைந்து யோகா உலக சாதனை நிகழ்ச்சி யினை Zoom ஆன்லைன் மூலம் நடத்தியது.

இந்த நிகழ்வில் சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்தும், தமிழ்நாடு, கர்நாட கா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்க ளில் இருந்தும் 875 மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், யோகா ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு பங்கேற்பாளரும் 10 யோகாசனங்கள் வீதம் 8750 யோகாசனங்களை ஒரே நாளில் 8750 மனித ஆற்றல் நிமிடங் களில் பல்வேறு இடங்களில் இருந்து செய்து உலக சாதனை செய்தனர். இச்சாதனையினை யுனிவர்செல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் அங்கீகாரம் செய்தது.

புதுக்கோட்டை திருவப்பூர் பி.வி.ஆர் திருமண மண்டபத்தில்  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெரினா பேகம் கலந்து கொண்டு, ஆத்மா யோகா மையத்திற்கும் அதன் நிறுவனர் யோகா ஆசிரியர் ரெ.பாண்டியன், செயலாளர் யோகினி புவனேஸ்வரி பாண்டியன் மற்றும் பங்கேற்பாளர் களுக்கும்  சான்றிதழ், பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

புதுக்கோட்டை
யோகா உலக சாதனைக்கான சான்றிதழை யுனிவர்செல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்டு நிர்வாக தலைவர் பாபு பாலகிருஷ்ணனிடம் சான்றிதழ் பெற்ற யோகா ஆசிரியர்கள் ரெ. பாண்டியன், புவனேஸ்வரி

யோகா உலக சாதனைக்கான சான்றிதழை யுனிவர்செல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்டு நிர்வாக தலைவர் பாபு பாலகிருஷ்ணன் வழங்கி பாராட்டினார்.

இதில், அகில உலக சிரிப்பு யோகா சம்மேளனத்தின் தலைவர் கோபாலனந்தா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நார்த்தா மலை ஆறுமுகம், குழந்தைகள் நல மருத்துவர் எஸ். ராமதாஸ், அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார், ராம. வைரவன்,  கவிஞர் கதிரேசன், தாவரவியல் ஆராய்ச்சியாளர் வரிசை முகமது, மரம் நண்பர்கள் நிர்வாகி கண்ணன் (எ) ராதா கிருஷ்ணன்.

நகர்மன்ற உறுப்பினர் கார்த்திக் மெஸ் மூர்த்தி, கவிஞர் கண்ணதாசன், அக்கு நித்தியானந்தா, சமூக ஆர்வளர் பிரசாத் மற்றும் ஆத்மா யோகா நிர்வாகிகள் பாண்டியன், வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சாதனையாளர் களைப் பாராட்டினார்கள்.

ஏற்பாடுகளை, ஆத்மா யோகா மைய யோகா ஆசிரியர்கள் அமுதா, விக்னேஷ், விஸ்வேஷ்வரன் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top