Close
செப்டம்பர் 20, 2024 1:21 காலை

மாவட்டத்தில் தொலைந்து போன 60 செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைத்த புதுக்கோட்டைமாவட்ட எஸ்பி

புதுக்கோட்டை

சைபர்கிரைம் பிரிவினரால் மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து செல்போன் தொலைந்து விட்டதாக காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளில் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்குமாறு மாவட்டட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவிட்டதன் பேரில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் சுமார் ரூ. 12 லட்சம் மதிப்பிலான 60 செல்போன்களை கண்டுபிடித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (01:03.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கலந்து கொண்டு செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். செல்போன் கண்டுபிடிப்பில் பணியாற்றிய சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காலை கண்காணிப்பாளர் ஆறபமுகம், காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றிய அனைத்து சைபர் கிரைம் பிரிவு போலீஸாரையும் மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டினார். இதே போன்று கடந்த 22.10.2021-ஆம் தேதியன்று சுமார் ரூ. 22 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரால் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர் செய்தியாளர்களிடம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கூறியதாவது:

 சைபர் கிரைமில் பல்வேறு வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.  இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்ற மாநிலங்களில் சேர்ந்தவர்களாக இருப்பதால் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, புதுக்கோட்டை காவல்துறை சார்பில் மற்ற மாநிலங்களுக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்யும் பணிக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மாநிலங்களில் பதுங்கியுள்ள குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

 மாவட்டத்தில் திருட்டு சம்பவம் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட கிரைம் அணியினர்   தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பல வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து திருடு போன நகைகள் இருசக்கர வாகனங்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

 தமிழக காவல்துறை சார்பில் புதுக்கோட்டை பசுமலைப்பட்டி பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி, தமிழக காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

எந்த துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டு சிறுவனை தாக்கிய உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சிறுவன் உடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தோட்டா மற்றும் பயிற்சி நேரத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் ஆகியவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கை  வந்த பிறகு அந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்படும்.

உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் அங்கு போரால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பிரிந்து தவித்து வரும் குடும்பங்களை,  காவல்துறையினர் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியும் அவர்களது மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மன நலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top