Close
நவம்பர் 22, 2024 5:54 காலை

கே.நெடுவயல் ஊராட்சியின் தேசியக்கொடியின் மூன்று வண்ணத்துடன் காட்சியளிக்கும் குடிநீர் நீர் மேல்நிலை தேக்க தொட்டி..

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் கே.நெடுவாசல் ஊராட்சியில் கவனத்தை ஈர்த்த மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி

கே.நெடுவயல் ஊராட்சியின் தேசியக்கொடியின் மூன்று வண்ணத்துடன் காட்சியளிக்கும் குடிநீர் நீர் மேல்நிலை தேக்க தொட்டி  அதிகாரிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின்  கவனத்தை ஈர்த்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம், கே.நெடுவயல் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட 20 ஆயிரம்  லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டிக்கு தேசப்பற்றுடன் தேசியக் கொடியின் மூன்று  வண்ணத்தையும் பூசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய கே.நெடுவயல் ஊராட்சி நிர்வாகத்தினரை  பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கே.நெடுவயல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில்  தேசியக்கொடியின் மூன்று வண்ணமும்  பூசப்பட்ட நிகழ்வு, ஒட்டுமொத்த அதிகாரிகள், ஊடகவியலாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

தேசியக் கொடியின் வண்ணத்தை  குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பூசியது குறித்து  கே.நெடுவயல்ஊராட்சித் தலைவர் சரவணன் கூறியதாவது:   வேற்றுமையில்  ஒற்றுமைக்கு பெயர் பெற்ற நம் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கே.நெடுவயல் ஊராட்சியில் கலை,கலாசாரம், ஒற்றுமையை பேணிக்காக்கும் வண்ணம் ஊர் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, புதிதாக கட்டப்பட்ட  மேல்நிலை நீர்தேக்க தொட்டி இதுவாகும் என கே.நெடுவயல் ஊராட்சித் தலைவர் சரவணன் பெருமையுடன் கூறினார்.
சென்றாண்டு மகளிர் தின கொண்டாடப்பட்ட மகளிர் தின விழாவில் உதவும் இதயங்கள் அறக்கட்டளை சார்பில் சிறந்த ஊராட்சித் தலைவர் விருது ஊராட்சித் தலைவர் சரவணனுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இவ்வாண்டு மகளிர் தினத்தன்று கே.நெடுவயல் ஊராட்சிக்கு பெருமை சேர்த்த கே.நெடுவயல் ஊராட்சித் தலைவர்  ஊராட்சி நிர்வாகத்தை பாராட்டுவோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top